Skip to content

பொய் புளுகு புறணி டுமீல்!

June 26, 2008

குழந்தைகள் எப்போது பொய் சொல்ல ஆரம்பிக்கின்றன தெரியுமா? அவர்கள் கூட இருக்கும் பெரியவர்கள் – ரொம்ப “பெரீயவர்கள்” இல்லை, அதாவது பெரியவர்களாக இருப்பதால் எல்லாமே அவர்களுக்கு தெரிந்து விடாது – பெரியவர்களுக்கும் ஒரு limit இருக்கிறது என்று குழந்தைகள் தெரிந்து கொள்ளும்போது பொய் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். 

ஒரு பாலர் பள்ளியில் மூன்று அல்லது நான்கு வயதுடைய குழந்தைகளை வைத்து, பொய் சொல்லும் திறனை அறிய ஆராய்ச்சி செய்தார்கள். ஒவ்வொரு குழந்தையாக அழைத்துப் போய், ஒரு அறையில் உட்கார வைத்து “உன் முதுகுப்புறம் உள்ள மேஜையில்  ஒரு விளையாட்டுப் பொருளை வைத்திருக்கிறேன். திரும்பி பார்த்தாயோ தெரியும் சேதி!” என்று மிரட்டி விட்டு, அந்த குழந்தையை தனியாக விட்டு சென்று  விட்டார்கள்.  

சிறிது நேரம் கழித்து அந்த குழந்தையை அழைத்து வெளியே வந்து, திரும்பி பார்த்தாயா என்று கேட்கப்பட்டது. இப்படி எல்லா குழந்தைகளையும் விசாரித்தார்கள். ஒரு பத்து சதவீதம் குழந்தைகள் திரும்பி பார்க்கவே இல்லை. மீதத்தில் முப்பது சதவீதம் குழந்தைகள், திரும்பி பார்த்தாலும் பார்க்கவே இல்லை என்று பொய் சொன்னார்கள். இன்னொரு முப்பது சதவீதம் திரும்பி பார்த்தேன் என்று ஒப்புக்கொண்டார்கள். மீதம் இருக்கிற முப்பது சதவீதம் பதில் சொல்லாமல் இருந்தார்கள். பொய் சொன்னவர்களும், உண்மை சொன்னவர்களும் தைரியமாகவே இருந்தார்கள். இந்த பதில் சொல்லாத குழந்தைகள் ரொம்ப பயந்து போய் இருந்தன – அவர்கள் பொய் சொல்ல இன்னும் முழுமையாக கற்றுக் கொள்ளவில்லை. 

இப்படி ஒரு பிரச்னையிலிருந்து தப்பிப்பதற்காக, அல்லது ஆசைப்பட்ட பொருளை அடைவதற்காக என்று பொய் சொல்வதில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பொய்யில் பெரிய வேறுபாடு இல்லை – பொய்யின் விளைவில்தான் இருக்கிறது🙂

பொய் என்றாலே நினைவுக்கு வருவது ஜோசப் கொயப்பல்ஸ்! இரண்டாம் உலகப்போரில் ஒரு பக்கம் ஹிட்லரையும், மறுபக்கத்தில் உலகத்தையும் ஏமாற்றிய செய்தித்துறை மந்திரி. அவராவது பழைய ஆள்! சமீபத்தில் ஒருவர் இருக்கிறார். அவருக்கு வலையில் ரசிகர் மன்றமே வைத்திருக்கிறார்கள். 

வளர்ந்த மனிதர்கள் சொல்லும் பொய்யிலும், பொய் சொல்பவர்களிலும் சில வகைகளை பார்ப்போம். சிலர் ஒரு வகை சமூக விரோத போக்கை கொண்டிருப்பார்கள். அவர்கள் கிரிமினல்களாக இருக்கவேண்டும் என்பதில்லை. தனது சுயநலமே பெரிது என்று நினைத்து, மற்றவர் அதனால் படும் கஷ்டங்களை கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். இவர்கள் எதற்கும் அஞ்சாமல் சுய லாபத்திற்காக பொய் சொல்வார்கள். இவர்கள் வியாபாரிகளாகவோ, அரசியலிலோ இருக்கக் கூடும். பொய்யின் விளைவுகளுக்கு வருத்தப் படாமல், குற்ற உணர்வில்லாமல் இருப்பதால் இவர்கள் வாழ்க்கையில் வெற்றியும் பெறக்கூடும். 

வேறு சிலர் அன்பிற்காகவும், கவனத்தை ஈர்ப்பதற்காகவும் பொய் சொல்வார்கள். இவர்கள் தாங்களாகவே ஒரு கற்பனை உண்மையை நீட்டி முழக்கி சொல்வதில் பொய் கலந்து சொல்வார்கள். இவர்கள் கவிஞர்களாகவும் இருக்கக் கூடும்🙂

 

இன்னொரு வகை இருக்கிறார்கள். சுய காதல் அதிகம் உடையவர்கள். இவர்களுக்கு எப்போதும் எல்லா விஷயத்திலும் வெற்றி பெற்றவர்களாக இருக்க வேண்டும், மற்றவர்களிடம் இவர்கள், தான் மிகவும் சிறந்தவர் என்று நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். இத்தகைய மனிதர்கள் எப்போதும் அடுத்த மனிதர்களிடமிருந்து சிறப்பு கவனிப்பை எதிர்பார்ப்பார்கள். இதற்காக சளைக்காமல், தான் செய்தது, செய்யாதது எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு அதிகப்படியாக அடித்து விடுவார்கள். கேட்பவர்கள், இவர்களின் சுயபுராணத்தை எல்லாம் தன்னம்பிக்கை என்றும், இருந்தாலும் இருக்கும் என்று நினைத்து நம்பிவிடுவார்கள். 

சிலர் உணர்ச்சி வசப்படுவார்கள் – அதனால் தவறுக்கு மேல் தவறு நிகழும். இதை மறைப்பதற்காக பொய் சொல்வார்கள். இவர்கள் சொல்லும் பொய்கள் எல்லாம் பழியை அடுத்தவர் மேல் போடுவதற்காகவும், பொறுப்பை தட்டிக் கழிப்பதற்காகவும் இருக்கும்.

கடைசியில் ஒரு வகை, இவர்கள் ரொம்பவும் நேர்மையாகவும், திறமையாகவும் நிஜமாகவே இருக்க வேண்டும் என்று ஒரு கொள்கை வைத்திருப்பார்கள். ஆனால் நிஜத்தில் அந்த அளவுக்கு இவர்கள் தங்களுக்கு தாங்களே வைத்துக்கொண்ட அளவுக்கு திறமையாளர்களாக இருக்க இயலாமல் போக அதை மறைக்க பொய் சொல்வார்கள். சமயத்தில் சிறு சிறு விஷயத்துக்கெல்லாம் பொய் சொல்வார்கள். கடையில் அதிக விலைக்கு பொருளை வாங்கி விட்டு, வீட்டில் மனைவியிடம் மிகவும் குறைவாக பேசி வாங்கியதாக சொல்வதைப் போலத்தான். 

பொய் சொல்லாமலே ஒரு  மனிதன் இருக்க முடியுமா என்று யோசிக்கவே முடியவில்லை. நாம் எவ்வளவு பொய் சொன்னாலும் நமது குழந்தைகளையாவது பொய் சொல்லாதே என்று சொல்லி வளர்க்க வேண்டும். அப்போதுதான் அவர்களாவது, நேர்மையான,  ஒருமைப்பாடு உடையவர்களாக, வெற்றி பெறுபவர்களாக, சமூகத்தில் நம்பிக்கைக்குரிய நல்ல மனிதர்களாக இருப்பார்கள். 

இது எப்படி என்றால், பள்ளியில் ஆசிரியரிடம் என்ன எதிர்பார்க்கிறோம்? மாணவர்களை நன்றாகப் படிக்க வைப்பார் என்றுதானே? அவர் “நானே படிக்கிற காலத்தில் சரியாகப் படித்ததில்லை – இந்த குழந்தைகளை எப்படி கஷ்டப்படுத்துவேன்” என்று சொன்னால் எப்படி இருக்கும்! அது போல, நாம் பொய் சொன்னாலும் நமது குழந்தைகளை பொய் சொல்ல விடக் கூடாது!

[பொய் பற்றிய ஆராய்ச்சிக்கு பழைய NYTimesன் கட்டுரையை நான் படித்துவிட்டு எழுதவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.🙂 ]

 

One Comment leave one →
  1. July 17, 2010 4:43 pm

    super appu. ana na ithu varaikum poi sonathey illa

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: