Skip to content

திரைப்படங்களில் ஜாதி மதங்களைப் பற்றிய கண்ணோட்டம்

May 9, 2008

இது ஒன்றும் புதிய செய்தி இல்லை. கொஞ்சம் நமது சினிமாக் கதைகளைப் பற்றி யோசித்தாலே புரியும். இரண்டு வருடங்களுக்கு முன் வந்த இந்த கட்டுரையை நேற்று தற்செயலாக படிக்க நேர்ந்தது. திரைக்கதைகளில் வரும் இந்த ஜாதி மத ரீதியிலான stereotype தன்மையை தெள்ளத் தெளிவாக இந்தக் உரையில் ஹிந்தி கவிஞர் – எழுத்தாளர் ஜாவேத் அக்தர் எடுத்து வைத்திருக்கிறார்.

while we can have a ‘Vijay’ getting saved by a ‘786 billa’ (metal arm band that Amitabh Bachchan wears in ‘Coolie’), one is yet to hear of a Muslim character being saved by a Ganesh idol.

இது அவர் ஹிந்தி சினிமாவைப் பற்றி சொன்னாலும் தமிழ் சினிமாக்களும் ரொம்ப மாறுபட்டதில்லை. ஒரு கைதி பாத்திரமோ, அல்லது கூலி பாத்திரமோ எதாவது நம்பர் அணிகிற மாதிரி ஒரு பாத்திரம் கதையில் வந்தால் சந்தேகமே வேண்டாம் – அது கண்டிப்பாக 786 ஆகத்தான் இருக்கும்.

வில்லனாக வந்து அடித்து உதைப்பவர் பெரும்பாலும் இந்துவாக இருப்பார். அதிலும் இப்போதைய trend உருத்திராட்ச மாலை போட்டு காவி வேட்டி கட்டிக்கொண்டு வந்தாலே அவன் வில்லன் என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது. முக்கால் வாசி சந்தர்ப்பத்தில் தப்பிக்க வைப்பவர்கள் முஸ்லிமாக இருப்பார்கள்.

கதாநாயகன் எங்காவது அடிபட்டு விழுந்து விட்டாலோ அவ்வளவுதான் – நிச்சயம் மருந்து கொடுப்பவர் கிறிஸ்தவ கன்னியா ஸ்த்ரீயாகத்தான் இருப்பார். கதாநாயகனுக்கு புத்திமதி சொல்பவர் பாதிரியாராக இருப்பார். நண்பனாக இருப்பவர் முஸ்லிமாக இருப்பார். ஏமாற்றுவது, மாட்டிக்கொண்டு உதவி கேட்பது எல்லாம் ஐயராக இருப்பார்கள். அண்மையில் வந்த படங்களைப் பார்த்தால், கதாநாயகிகள் முக்கால் வாசிப்பேர் பிராமணப் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.

ஒருவர் “அல்லா” என்றோ “ஏசுவே” என்று சொன்னால் அருகில் இருக்கும் நடிகர்கள் பரவசத்தை முகத்தில் கொப்புளிக்க செய்வார்கள். ஆனால் “மாரியம்மா” என்றோ, “ராமா” என்றோ, “கிருஷ்ணா” என்றோ செல்வதாக இருந்தால் போதும் – கூடவே எதாவது ஒரு பாத்திரம் அதை கிண்டல் செய்யுமாறு பார்த்துக்கொள்வார்கள். கோவிலுக்கு போனால் சைட் அடிப்பதாக காட்டுவார்கள். மசூதியிலோ, சர்ச்சிலோ அப்படி காட்ட மாட்டார்கள்.

எல்லா ஜாதி மதங்களிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் – தீயவர்களும் இருக்கிறார்கள். ஒரு சிலரை மட்டும் இப்படி சித்தரிப்பது பொதுவானவர்களுக்கு மட்டுமல்ல அடுத்த தலைமுறையின் எண்ணப்போக்கை கூட பாதிக்கும். “Art is all about entertainment, but there’s a fine difference between art and circus” என்று ஜாவேத் அக்தர் சொல்வது போல் தேவையில்லாத இந்த stereotype களை உடைத்துக் கொண்டு சுதந்திரமாக, திரைப்படத்தை ஒரு கலையாக நினைத்து படம் எடுக்கும் காலமும் வரவேண்டும்.

Advertisements
2 Comments leave one →
 1. ஸ்ரீஜன் permalink
  August 28, 2008 12:31 pm

  முக்கியமாக, வேறு மதத்தினரை இழிவாக காட்டினால் வெட்டி போட்டுவாங்க- இல்லயா? அந்த பயம் தான் ஸ்ரீ, வேற என்ன. கருணாநிதி முதல் கடை நிலை ஊழியர் வரை பெருமாளை விமர்சனம் செய்யலாம்… அதுவே அல்லாவையோ, ஏசுவையோ, விமர்சிக்கட்டுமே…? வந்து வெட்டிட்டு போயிடுவாங்க.. இதுல என்ன ரொம்ப வேதனையான விஷயம் னா, கூட சிரிக்குற/ரசிக்கிற எல்லாருமே இந்துக்கள்ங்கிரது தான் 😥

  ஸ்ரீஜன்

 2. pandee permalink
  September 25, 2010 9:43 am

  திரைப்படங்களில் ஜாதி மதங்களைப் பற்றிய கண்ணோட்டம்
  வேறு மதத்தினரை இழிவாக காட்டினால் வெட்டி போட்டுவாங்க- உண்மைதான் இந்து மதத்தில் உள்ளவர்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: