Skip to content

பாண்டியராஜனின் ஆண்பாவம், மற்றும் சில படங்கள்…

February 3, 2008

pandiyarajan.jpgஇந்த வாரம் துக்ளக் இதழில், பாண்டியராஜன் தன் திரையுலக அனுபவங்களை பகிர்ந்து கொண்ட செய்திகள் வந்திருக்கிறது. பாண்டியராஜனின் இப்போதைய படங்கள் பார்க்க சகிக்காமல் இருந்தாலும், ஆரம்பத்தில் ஆண்பாவம், மனைவி ரெடி, நெத்தியடி போன்ற படங்கள் எனக்கு பிடிக்கும். இந்த படங்களில் பார்க்கும்போதே , பாக்யராஜின் படங்களின் பாதிப்பு நன்றாகவே தெரியும்.

காமடியும், காட்சி அமைப்புகளும் இயல்பாக இருக்கும். ஆண்பாவம் படத்தில், தன் அப்பா v.k ராமசாமியிடம் தனக்கு கல்யாணம் செய்து வை, இல்லா விட்டால் அங்கே உட்கார்ந்திருக்கும் பாட்டியை கல்யாணம் கட்டுவேன் என்று சொல்லி கேட்பார் “நீ மட்டும் எங்க அம்மாவை கல்யாணம் கட்டலாம், நான் உங்க அம்மாவை கட்டக்கூடாதோ?” – பார்க்கும்போதெல்லாம் சிரிப்பு வந்து விடும்.

‘ஆண்பாவம்’ படத்தைப்பற்றி துக்ளக் கட்டுரையில் சொல்லும்போது:

முதலில் ஆண்பாவம் படத்தில் நான் நடிப்பதாக இல்லை. இரண்டு ஹீரோக்கள் கதைக்கு, இரண்டாவது ஹீரோ கிடைப்பது சிரமமாக இருந்ததால், மக்கள் தலை மீது பாரத்தைப்போட்டு, நானே நடிக்க இறங்கினேன். நான் நடிப்பது என்று ஆரம்பித்தபின், என் அசிஸ்டண்டுகள் எல்லாம், நான் எனது ரோலைத்தான் மேலும் வளர்ப்பேன் என்று நினைத்தார்கள்.

நான் என்ன செய்தேன் தெரியுமா? என் ரோலுக்கான காட்சிகளை குறைத்தேன். டூயட்டை தவிர்த்தேன். ஒரு நடனம் கூட ஆண்களோடு மட்டும் ஆடுகிறமாதிரி அமைத்தேன். அந்த படம் சூப்பர் ஹிட் என்றதும் தைரியம் வந்து விட்டது…

இப்போதெல்லாம், ஒரு extreme-ல் “அன்பே சிவம்”, “குருதிப்புனல்”, “ஹே ராம்” என்று ஒரு புறத்திலும், இன்னொரு extreme-ல் விஜய் – அஜித் – ஆர்யா – சூர்யா என்று இன்னொரு புறத்திலும் எடுத்து தள்ளுகிறார்கள். இவ்வளவு செலவுகள் செய்து படம் எடுக்கத் தேவை இல்லை – சிறிய அளவு செலவு செய்தாலும் கதை நன்றாக இருந்தால் லாபம் கிடைக்கும்தானே! ஹாலிவுட்டை பிரமாண்டத்துக்கு மட்டும் எடுத்துக்கொள்ளாமல் அவர்கள் செய்வது போல் நாவல்கள், கதைகளை படமாக ரசிக்கும்படி எடுத்தால் நிச்சயம் வரவேற்பு இருக்கும்.

இதே கட்டுரையில் பாண்டியராஜன், “மற்ற படங்களில் பிரச்சனை என்ன என்றால் ஒரு வில்லன் என்று இருக்கும். எங்கள் படத்தில் வில்லன் யாரென்றால் ஒரு பிரச்சனை என்று மாறுபட்டு புதுமையாக இருக்கும்” என்று சொல்கிறார். சரியான பாயிண்ட் தான். மற்ற இயக்குனர்கள் யோசிப்பார்களா?

ஆண்பாவம் பாடல்களை கேட்க இங்கே க்ளிக்கவும், பார்க்க இங்கே க்ளிக்கவும்.

2 Comments leave one →
  1. February 5, 2008 8:26 am

    >>இவ்வளவு செலவுகள் செய்து படம் எடுக்கத் தேவை இல்லை – சிறிய அளவு செலவு செய்தாலும் கதை நன்றாக இருந்தால் லாபம் கிடைக்கும்தானே!

    True. Most of the movies are not worth the money spent on making those.

  2. February 11, 2008 11:28 pm

    Ada same thought had come to me today about panidayarajan ! same scene i was quoting to my friend ! exactly we compared anbe sivam, kuruthi punal etc….🙂 most people is having the feeling about pandiayarajan like this it seems !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: