Skip to content

Surveysan short story competition – reviews

December 24, 2007

சிறுகதைப்போட்டி பற்றிய விபரம் இங்கே இருக்கிறது.

armchair_critic.gifசன் டீவியில் கால்மேல் கால் போட்டு படங்களை கண்ணாடி டம்ப்லருக்குள் கல் போட்டு குலுக்கின குரலில் விமர்சிக்கிறாரே அவரையே குருவாக நினைத்து வணங்கி விமர்சன வேலையை செய்கிறேன்…

வினையூக்கி: ஜெனியும் நானும் லேப்டாப்பில் பார்த்த பேய்ப்படம்
கதை ஒரு evil dead மாதிரி ஒரு கல்ட் கதை முயற்சித்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். கதை சுவாரசியமாக ஆரம்பித்து சட்டென்று முடிந்து விட்டது…. சுவாரஸ்யம் கெடாமல் இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்… பரவாயில்லை… பேய்ப்படம் – பப்படம்.

இராம்/Raam – செப்புத் தாழ்ப்பாள்
செப்பு தாழ்ப்பாளை எப்படி கதையில் ஓட்ட வைக்க போகிறார் என்று பார்த்தேன்… வட்டார வழக்கு எழுதுவதில் இது இவருக்கு ஆரம்ப கால முயற்சியோ என்று சந்தேகமாக இருக்கிறது. கதை பரவாயில்லை – செப்புத் தாழ்ப்பாள் – கொஞ்சம் களிம்பு

TBCD: பழக்க வழக்கம் !
சிறுகதையில் ஒரு ஹைக்கூ போல 🙂 நாலு வரி ஜோக்குக்கும் சிறுகதைக்கும் நடுவில் இருக்கிறது… நன்று.. பழக்க வழக்கம் – துணுக்கு தோரணம்.

நிலா ரசிகன் – ஒரு நடிகையின் கதை
கதை ஆர்வத்தை தூண்டி சப்பென்று முடிந்து விட்டது… நடிகையின் கதை என்றது கொஞ்சம் ‘கவர்ச்சி’ இருக்கும் என்று பார்த்தால் அவர் – இவர் என்று யாரோ பெரிசை சொல்வது போல் கதைஎங்கும் வருகிறது… பரவாயில்லை… – ஒரு நடிகையின் கதை – அடுத்த கதைக்கு விதை

மோகந்தாஸ் – கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில்
நிஜமாகவே நடந்தது போல் எழுதி இருக்கிறார். கதையின் முடிவும் யூகிக்க முடியாமல் நச் என்று இருந்தது. அருமை – க எ க செ பொ – ந பொ! (நல்ல பொழுதுபோக்கு)

கார்த்திக் பிரபு – அப்போ நீ தூங்கியிருப்ப !!!
கொஞ்சம் பெரிய கதை – இதை நச் சிறுகதை என்று சொல்லலாமா தெரியவில்லை… இருந்தாலும் பிரயாண அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் நன்றாக அனுபவித்து எழுதி இருக்கிறார்… பரவாயில்லை – அப்போ நீ தூங்கியிருப்ப – அசதி

கோவி கண்ணன் – நண்பனின் தங்கை…
வழக்கமான கதை (கண்ணெதிரே தோன்றினாள்?.. ) என்றாலும் நிதானமாக எழுதப்பட்டதென்று கதையின் நடையிலிருந்து தெரிகிறது. நன்று. நண்பனின் தங்கை – நட்புக்குள் வேடிக்கை

பாசமலர் – ஆசைக்கு ஏது வெட்கம்?
வித்தியாசமான கதை – முன்பெல்லாம் ரேடியோவில் விவிதபாரதியில் நாடகம் கேட்போம் – பதினைந்து நிமிட நாடகம் – ஏனோ அதுதான் நினைவுக்கு வந்தது.. பரவாயில்லை – ஆசைக்கு எது வெட்கம் – யாருக்கும் வெட்கமில்லை

செல்வன் – பூனைக்கு மணி கட்டியவள்
புதிய சிந்தனை – ஓரின சேர்க்கையை வித்தியாசமான கோணத்தில் அணுகியிருக்கிறார் – கதை கொஞ்சம் யோசிக்க வைக்கிறது – அருமை – பூனைக்கு மணி கட்டியவள் – ஆராய்ச்சி மணி

ஜெகதீசன் – தப்பா நினைக்க மாட்டயே?
கதை வழக்கமான கதை – வழக்கமான பாணி – ஆனால் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. பரவாயில்லை – தப்பாக நினைக்க மாட்டாயே – தயக்கம்

ramachandranusha(உஷா) – நானே நானா?
பெரிதாக எதிர்பார்த்து கனவாக முடிந்தது கதை – ஆனாலும் நச் கொஞ்சம் குறைவு தான் சொல்லிய விதம் நன்றாக இருந்தது – பரவாயில்லை – நானே நானா – ஏனோ தானோ

பிரதாப் குமார் சி – அப்பாயின்மென்ட் கிடைச்சிருச்சு….
கதை பெரிதாக எதோ இருக்கிறது என்று பார்த்தால் சட்டென்று முடிந்து விடுகிறது. குறைந்தது அவர்கள் மூட நம்பிக்கை பொய்த்தது என்றாவது நினைத்தேன். கதை பரவாயில்லை – அப்பாயின்மென்ட் கிடைச்சிருச்சு – வேலை காலி

பெனாத்தல் சுரேஷ் கடன் அட்டை
நடைமுறை பிரச்னையை வசன வடிவில் அழகாக எழுதி இருக்கிறார். என்ன ஆகப்போகிறதோ என்று பதைக்க வைக்கிறது. முடிவு ரொம்பவும் நச் என்று இல்லாவிட்டாலும் கொஞ்சம் வித்தியாசம் தான். கதை அருமை – கடன் அட்டை – வருமானம் அதிகம்

நக்கீரன் – வீட்டில்….? யாருமில்லை
மற்றொரு பேய்கதை. மடக்கி மடக்கி புது தினுசாக கவிதை மாதிரி எழுதி இருக்கிறார் :). கதை பரவாயில்லை – வீட்டில்…? யாருமில்லை – சத்தமில்லாமல் எதிரொலி

ஹரன்பிரசன்னா – சனி
இது அறிவியல் புனைகதை என்று அவரே சொல்லாவிட்டால் அப்படி ஊகிப்பது சற்று கடினம். இதே மாதிரி கதைகள் தன்மை நிலையில் நான் நான் என்று வரும். – படர்க்கையில் எழுதி இருப்பது வித்தியாசமாக இருக்கிறது. கதை – அருமை – சனி – இதன் வகை தனி

VSK – நிழலும், நிஜமும்!
இது உண்மைக்கதை என்கிறதால கதையை பத்தி சொல்லவும், நச் effect பற்றி விமர்சிக்கவும் தயக்கமாக இருக்கிறது – கதை சொன்ன விதம் பரவாயில்லை – நிழலும் நிஜமும் – வாழ்க்கையும் சோகமும்

Rathnesh – கிராமத்துப் பெரியவரின் திடீர் பட்டண ஆசை
கதை முயற்சி பாராட்ட தக்கது – பரவாயில்லை – கிராமத்துப் பெரியவரின் திடீர் பட்டண ஆசை – மோசம் இல்லை

நாடோடி இலக்கியன் – சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!!
அட்டாலும் பால்சுவையில் குன்றா(து) அளவளவாய் நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும் – இந்த மூதுரை நினைவூட்டியது கதை – பரவாயில்லை – சங்கு சுட்டாலும் வெண்மை தரும் – நிறைவு

Rama – கதைப்போட்டி…
கதை எழுதிய விதம் அருமை – Nothing is better than nonsense – நல்ல வழக்காக இருக்கிறது 🙂 – கதை பரவாயில்லை – கதைப்போட்டி – புதிர் பெட்டி

மங்களூர் சிவா – நச்சுனு ஒரு கதை
லேட்டேஸ்ட் படங்கள் போல கதையும் ஒரு மார்க்கமாக இருக்கிறது. பரவாயில்லை – நச்சுன்னு ஒரு கதை – அவஸ்தை 😛

கிருத்திகா – பெண்ணியம்
கதை கொஞ்சம் நாடகம் பார்க்கிற விளைவை ஏற்படுத்துகிறது. கதை எழுதிய விதம் நன்றாக இருந்தது – பெண்ணியம் – கண்ணியம்

இலவசக்கொத்தனார் – அவள் பறந்து போனாளே…!
கதை நன்றாக செல்கிறது – ஆனால் வழக்கமான கதை பாணி என்றே தோன்றுகிறது. கதை எழுதிய விதம் நன்று – அவள் பறந்து போனாளே – பழைய கவிதை

Divya – மீனா…
கதை வழக்கமான ஒன்று – முடிவு க்ரைம் நாவல்கள் படித்து படித்து யூகிக்க முடிந்தது – கதை சொன்ன விதம் பரவாயில்லை – மீனா – வீணாக போகவில்லை

சிறில் அலெக்ஸ் – கள்ளன் போலீஸ்
கொஞ்சம் எதிர் பார்த்த கதை தான் – நச் குறைவு – ஆனால் எழுதிய விதம் நன்றாக இருந்தது – பரவாயில்லை – கள்ளன் போலிஸ் – பழைய திருடன்

வெட்டிப்பயல் – எங்கிருந்தாலும் வாழ்க!!!
கதை எழுதிய விதம் நன்றாக இருந்தது – ஆனால் முடிவு யூகிக்க கூடியதாக இருந்தது – கதை – பரவாயில்லை – எங்கிருந்தாலும் வாழ்க – வாழ்த்துக்கள்

நந்து f/o நிலா – எதுனா வேல இருந்தா குடு சார்
படிக்க படிக்க கொஞ்சம் பரபரப்பாக இருந்தது. படித்தவுடன் circus பார்க்கபோய் மனித தலை பாம்பு உடல் என்று உள்ளே போய் பார்த்துவிட்டு அசடு வழிய வருவோமே அது மாதிரி இருந்தது 🙂 – கதையில் ஒன்றுமில்லை என்றாலும் சொன்ன விதம் அருமை – எதுனா வேல இருந்தா குடு சார் – நல்ல வேலை சார்

விமர்சனம் புதிய கதைகளுக்கும், மீதமுள்ள கதைகளுக்கும் விரைவில் புதுப்பிக்கப் படும். விமர்சனத்துக்கு விமர்சனங்கள் வரவேற்க படுகின்றன.. (ரொம்ப தைரியம்தான் 🙂 )

dancingk.gif
Advertisements
12 Comments leave one →
 1. December 24, 2007 9:06 am

  நன்றி!

  Surveysun இல்ல Surveysan 🙂

 2. December 24, 2007 9:23 am

  Oh sorry… i think I better update the title

 3. December 24, 2007 11:09 am

  நன்றி ஸ்ரீகாந்த்.

 4. December 24, 2007 1:37 pm

  அகர வரிசைப்படியா..இல்லை..சர்வேசனில்..தொகுப்பு பிரகாரமா..எப்படி போடுறீங்க விமர்சனம்..

  ஏன்னா, ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகள் இருக்கு…

  பின்னுட்டம் வந்த வரிசையிலே நீங்க போட்டா எதுவும் விட்டுப் போகாது

  விமர்சனம். சன் குழும விமர்சனம் போல் இருக்கு… 🙂

 5. December 24, 2007 1:45 pm

  //
  அகர வரிசைப்படியா..இல்லை..சர்வேசனில்..தொகுப்பு பிரகாரமா..எப்படி போடுறீங்க விமர்சனம்..
  //

  TBCD sir, yes I am taking in the order as it appears in surveysan’s blog. I will update the review if the story for the contest is changed.

 6. December 24, 2007 2:06 pm

  ஏங்க ஸ்ரீகாந்த் என்கதை கடைசீல இருக்கு. எப்ப வந்து அத விமர்சிக்க போறீங்க? 😛

 7. இராம்/Raam permalink
  December 24, 2007 4:26 pm

  /வட்டார வழக்கு எழுதுவதில் இது இவருக்கு ஆரம்ப கால முயற்சியோ என்று சந்தேகமாக இருக்கிறது.//

  Boss,

  மதுரை வட்டார வழக்கை முழுவதயும் அவ்வளவு சீக்கிரத்திலே எழுத்திலே கொண்டு வரமுடியாது. நான் இப்போதான் முயற்சி பண்ண ஆரம்பிச்சிருக்கேன்…… 🙂

 8. December 24, 2007 9:56 pm

  நந்து f/o நிலா,

  கதைகளெல்லாம் பொறுமையாக படிக்க வேண்டியிருக்கு… நீங்கள் கேட்டதால் உங்களை காத்திருக்க வைக்காமல் உங்கள் கதைக்கு விமர்சனம் எழுதிவிட்டேன்… 🙂

 9. December 25, 2007 11:37 am

  மனமார்ந்த நன்றி ஸ்ரீகாந்த். பொறுமையாக எல்லாகதைகளையும் படித்து விமர்சிப்பது கடினமான வேலை. நான் முயன்றேன் முடியவில்லை. நீங்கள் பொறுமையாக படித்து சிறப்பாகவே விமர்சிக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

 10. December 26, 2007 12:16 pm

  எல்லா விமர்சனமும் முடிச்சப்பரம், நேரம் இருந்து, மூடும் இருந்தா,

  நம்மளதையும் ஒரு வெலசு வெலசுங்க 🙂

  http://surveysan.blogspot.com/2007/12/blog-post_09.html

 11. December 27, 2007 10:30 am

  அங்கிள் எங்க கதை விமர்சனம் எங்கே, சீக்கிரம் போடுங்க…

 12. September 30, 2009 10:36 am

  //Pavan

  அங்கிள் எங்க கதை விமர்சனம் எங்கே, சீக்கிரம் போடுங்க…//

  ரிப்பீட்டே 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: