Skip to content

Looking out of the window

November 17, 2007

உங்கள் வீட்டில் எங்காவது வெளிப்புறமாக பார்த்தபடி சாளரம் இருக்கிறதா? நகர நெரிசலில் இப்படியும் கேட்க வேண்டியுள்ளது😦. சரி, இருந்தால் அந்த ஜன்னலின் அருகில் அமர்ந்து ரசித்தது உண்டா? ரசிக்கக்கூடிய விஷயங்களில் இதுவும் ஒன்று. (மனோரஞ்சிதம் என்று பெயர் வைத்து விட்டு ரசிக்கிற மாதிரி உள்ள விஷயங்களை எழுதவில்லை என்றால் எப்படி🙂 )

நான் முதலில் நகரத்துக்கு வந்து தங்கியது ஒரு பேச்சுலர் மான்ஷனில். அப்போது நம்ம நண்பர்கள் கதவையே திறக்க மாட்டார்கள். ஜன்னலை பற்றி கேட்கவே வேண்டாம் – மூடியே இருக்கும். நான் தங்க ஆரம்பித்தவுடன் எல்லா ஜன்னல் கதவுகளையும் திறந்து வைக்க ஆரம்பித்தேன் – அதற்கே நிறைய ஆட்சேபனை – கொசு வீட்டுக்குள் வந்துவிடும் – தூசி படியும் – என்று பல காரணங்கள். இவற்றில் உண்மை இல்லாமல் இல்லை.

ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு கஷ்டம் – மற்ற அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்க  நேர்ந்தால் குளிருக்கு பயந்து அடைத்து வைத்துக்கொள்கிறோம். மொத்தத்தில் நாமே சிறை வைத்துக்கொள்கிறோம். Isaac Asimov எழுதிய சிறுகதை ஒன்று ஞாபகம் வருகிறது. எதிர்காலத்தில் வெளியே செல்லவே தேவை இல்லாமலிருந்தால் என்ன ஆகும் என்ற கற்பனை அது.

இப்போது நல்ல climate. குளிரும், மழையும் ரசிக்க ஜன்னலோரத்தில் உட்கார்ந்தால் நேரம் போவதே தெரியாது. அதுவும், அந்த மழை பெய்யும் நேரத்தில் மண்வாசனை அடிக்குமே – ஒவ்வொரு முறையும் நினைத்துக்கொள்வேன் – இந்த மண் வாசனையில் ஒரு room freshner இருந்தால் எப்படி இருக்கும் என்று!

See here for lot of freely downloadable stories.

One Comment leave one →
  1. November 21, 2007 9:40 am

    //இப்போது நல்ல climate. குளிரும், மழையும் ரசிக்க ஜன்னலோரத்தில் உட்கார்ந்தால் நேரம் போவதே தெரியாது. அதுவும், அந்த மழை பெய்யும் நேரத்தில் மண்வாசனை அடிக்குமே

    Exactly🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: