Skip to content

Humour – Grandma’s quips

October 28, 2007

ஊரிலிருந்து வந்த எங்க பாட்டியோட ஒரே காமெடிதான். சமயத்தில் ரொம்ப விவரமாகவும் சமயத்தில் ஒன்றுமே தெரியாதது போலவும் பதில் சொல்லி நமக்கு சிரிப்பை வரவழைத்து விடுவது எங்க பாட்டியிடம் ஒரு சிறப்பு. ஒரு சில சம்பவங்களை இங்கே சொல்லுகிறேன்.

எங்க பாட்டி சென்னைக்கு வந்த போது “பாட்டி கதவையெல்லாம் திறந்து போட்டு, உள்ளே வேலை செய்யக்கூடாது – திருடன் வந்து விடுவான் – பூட்டியே வைத்திருக்கணும்” என்றேன். அதற்கு பாட்டி “அப்போ, யாராவது வந்து கதவை தட்டினா, திருடனா இல்லையானு எப்படி தெரியும்?” – பக்கத்திலிருந்த என் ·ப்ரெண்ட் “பாட்டி, கதவை திறக்காமலே வர்ற ஆள்கிட்ட கேளுங்க ‘நீங்க நல்லவரா? கெட்டவரா?’னு” என்றான்.

***

சென்னைக்கு வந்த புதிதில் ·போனில் automated reply பற்றி பாட்டிக்கு தெரியாது. “நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்சமயம் பிசியாக இருக்கிறார். தயவு செய்து காத்திருக்கவும்” போன்ற பெண் குரலை கேட்டால் – பாட்டி “சரிம்மா.. அப்புறம் போன் பண்றேன்” என்று சொல்லிவிட்டு ·போனை வைப்பாள்.

***
பிறகு ஒரு சமயம், பாட்டியின் ரேஷன் கார்டு xerox எடுக்க வேண்டியிருந்தது. “தெரு முனையில் இருக்கும் கடையில் எடுத்துக்கொள்” என்றதற்கு – பாட்டி “நான் அங்கே போகமாட்டேன்” என்றாள். ஏன் என்று கேட்டதற்கு “அங்கே தமிழில் xerox எடுக்கமாட்டார்கள். english பேப்பர்களைத்தான் xerox எடுப்பார்கள்” என்றாள் ! ஐயகோ என்று அடித்துக்கொண்டேன்.

***

தசரா சமயத்தில் பெங்களூருக்கு போனோம். திப்பு சுல்தான் அரண்மனையை பார்க்க போனபோது “ஏண்டா துப்பு கொடுத்தவன்தானே துப்பு சுல்தான்?” என்றாள்.

***

ஒரு தடவை பாட்டிக்கு flight-ல் போக சான்ஸ் வந்தது. நானும் பக்கத்தில் உட்கார்ந்து போனேன். அப்போது flight-ல் நான்கு கதவுகள் இருக்கின்றன. மேலே oxygen mask இருக்கிறது. கீழே லை·ப் ஜாக்கெட் இருக்கிறது என்று air hostess சொல்லிக்காட்டுவதை பார்த்துவிட்டு என்ன சொல்கிறார்கள் என்றாள். முடிந்தவரை சொன்னேன். இத்தனையும் கேட்டுவிட்டு, இந்த பாராஷ¤ட் எங்கே இருக்கிறது? என்றாள்!

One Comment leave one →
  1. Giri permalink
    October 28, 2007 9:04 pm

    Very funny. The parachute question made me think. LOL.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: