Skip to content

Musing about the gym!

October 16, 2007

bruce.jpg

நாளையிலிருந்து ஜிம்முக்கு போகிறேன் என்று ஆரம்பித்து கிளம்பி ஏழெட்டு தடவை ஆகிவிட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் சில வாரங்களுக்கு மேல் செல்வது நின்றுவிடும். ஆனாலும் அதே வேகத்தில் திரும்பவும் ஆரம்பிப்பது, “ஏய், நாளையிலிருந்து வருகிறேன்… அந்த ஐநூறு கிலோ டம்பிள்சை எடுத்து தூசி தட்டி வை.. ” என்று ஜிம்மிலிருக்கிற friendடம் வீரமாக 🙂 சொல்வது தான். (வடிவேலு weightlift பண்ணுவதுதான் நினைவுக்கு வருகிறது).

இப்படித்தான் ஒருமுறை அவனும் நானும் பக்கத்து பக்கத்தில் treadmill-ல் ஓடிக்கொண்டிருந்தோம். ஒருத்தருக்கொருத்தர் சளைக்காமல் ஐந்து.. ஆறு.. என்று ஸ்பீடு லெவலை ஏற்றிக்கொண்டோம். அவன் பாவம் வேகத்துக்கு தகுந்தாப்போல் ஓடிக்கொண்டே மூச்சு வாங்கிக்கொண்டு திரும்பிப் பார்த்தால், இங்கே treadmill ஓடிக்கொண்டிருக்க நான் இரண்டு காலையும் treadmill beltக்கு பக்கத்தில் உள்ள கட்டையில் வைத்து இளைப்பாறி(!)க்கொண்டிருந்தேன். வெறுத்துப்போய் விட்டான்!

சரி ஜிம்மில்தான் இப்படி என்றால் யோகா கற்றுக்கொள்ள போனோம். க்ளாசில் ப்ராணாயாமம் செய்ய கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்கள். எல்லோரும் அமைதியாக இருக்க எனக்கு அப்போது பார்த்து ஜோக் ஒன்று நினைவுக்கு வந்து சிரிப்பு வந்து தொலைத்து லேசாக ஆடிக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தேன் – இதை பார்த்துவிட்டு பக்கத்திலிருந்தவனுக்கு ஏற்கனவே மூச்சை அடக்கிக் கொண்டிருந்ததில் பிடுங்கிக்கொண்டு சிரிப்பு பீறிட்டு வந்து விட்டது. அவன் பாட்டுக்கு மதன் பாப் மாதிரி சிரிக்க ஆரம்பித்து விட்டான்.

எனக்கு இன்னொரு friendம் இருந்தான். வீடு முழுவதும் bruce lee படமாக ஒட்டி வைத்திருப்பான். அதை பார்த்து பார்த்துதானோ என்னவோ அவனுக்கு bruce lee மாதிரியே உடல் அமைப்பு வந்து விட்டது. குங்·பூ கற்றுக்கொள்ள அவனுக்கு ரொம்ப ஆசை. கற்றுக்கொடுப்பவர்கள் தான் கிடைக்கவில்லை. ஜிம்முக்கு விடாமல் வருவான்.

ஜிம்முக்கென்று வருகிற ஆட்கள் பற்றியும் சொல்ல வேண்டும் – ஒவ்வொருத்தர் ஒவ்வொரு காரணத்துக்காக வருவார்கள் – சும்மா பாடி டோனிங் பண்ண வருகிறேன் என்பதிலிருந்து, டாக்டர் எக்ஸர்ஸைஸ் பண்ண சொல்லியிருக்கிறார் என்று வருகிற பெரியவர்கள் வரை நிறைய காரணங்கள் சொல்வார்கள். அடுத்த மாதம் கல்யாணம், ஒரு personalityக்காகத்தான் என்று கூட சொல்பவர்கள் உண்டு. 🙂

ஜிம்முக்கு செல்வதற்கு நீச்சல் பெட்டர் – enjoy பண்ணி நீச்சல் அடிக்கலாம் என்றும் advice பண்ணினால் – ஐயோ, நீச்சலா.. பலபேர் நீச்சலடிக்கும்போது தண்ணியில என்னெல்லாம் கலக்குதோ என்று நமட்டு சிரிப்புடன் discourage பண்ணிவிடுகிறார்கள். இதற்காகவே நீச்சலுக்கு செல்வதில்லை.

எது எப்படியோ, நல்ல ஆரோக்கியமான வலிவான உடல், மனதிற்கும் ஒரு தைரியத்தையும் confidenceஐயும் ஏற்படுத்தும் என்பது நானே தெரிந்து கொண்டது. ம்… நாளையிலிருந்து ஜிம்முக்கு போகப் போகிறேனாக்கும் !… 🙂

Advertisements
5 Comments leave one →
 1. October 17, 2007 6:22 pm

  Why is the post title in English but the post is in tamil? I mean why not the title too in tamil?

 2. October 17, 2007 8:48 pm

  This is very common – everybody knows, you don’t know? 🙂

  Its because most of the people searching in google won’t type in tamil and search isn’t it? For their ease only, I am writing the title in english… they should not miss the chance to get to know the thoughts of an intellectual – that is I – Me isn’t it? :)))

  (அம்மா தாயே! hit count போடுங்கம்மா.. ரேஞ்சுக்கு கூகிள்ளயாவது யாராவது தேடிவரமாட்டாங்களானு நான் plan பண்ணி டைடில் மட்டும் இங்க்லீஷ்-ல வைக்கறேன்னோ, அல்லது இங்க்லீஷ் அவ்வளவா வராது, அதனால contentஐ தமிழ்ல எழுதறேன்னோ உங்ககிட்ட பொய்யா சொல்லமுடியும்?! :)) )

 3. October 19, 2007 9:36 pm

  Nice writeup !
  //எல்லோரும் அமைதியாக இருக்க எனக்கு அப்போது பார்த்து ஜோக் ஒன்று நினைவுக்கு வந்து சிரிப்பு வந்து தொலைத்து லேசாக ஆடிக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தேன் – இதை பார்த்துவிட்டு பக்கத்திலிருந்தவனுக்கு ஏற்கனவே மூச்சை அடக்கிக் கொண்டிருந்ததில் பிடுங்கிக்கொண்டு சிரிப்பு பீறிட்டு வந்து விட்டது. அவன் பாட்டுக்கு மதன் பாப் மாதிரி சிரிக்க ஆரம்பித்து விட்டான்//
  LOL

 4. October 19, 2007 9:58 pm

  @ Thanks for visiting sami.
  Do you go to gym ?! just curious 🙂

 5. December 9, 2007 6:07 am

  I’d prefer reading in my native language, because my knowledge of your languange is no so well. But it was interesting!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: