Skip to content

Katradu thamizh (Thamizh M.A)

October 15, 2007

கற்றது தமிழ் (தமிழ் எம்.ஏ)

tamilma.jpgபடம் ‘புதுப்பேட்டை’ மாதிரி dark concept. வழக்கமாக அரசியல்வாதிகள், சினிமா கலைஞர்கள், அரசு அதிகாரிகளைத்தான் போட்டுத்தாக்கிக் கொண்டிருந்தார்கள். இப்போது ஒரு மாறுதலுக்கு கணினி மற்றும் BPO மக்களை போட்டுத்தாக்கி இருக்கிறார்கள். படத்திலேயே சொல்லி விட்டார்கள் – இதற்கு logic, reason எல்லாம் பார்க்கக்கூடாது என்று – அதனால் logic எல்லாம் பார்க்காமல் – விட வேண்டியதுதான். படத்தின் பலம் – காமிராவும் பின்னணி இசையும். பலவீனம் – கதையும், சொல்லிய விதமும்.

கதையை பின்னவீனத்துவம் (!), சொல்லிய விதம் Non-linear என்றெல்லாம் பாராட்டுகிறார்கள். Non-linear editing கூட பரவாயில்லை. பின் நவீனத்துவம் என்பதெல்லாம் இந்த படத்துக்கு கொஞ்சம் அதிகம் தான்.  யதார்த்தத்தைக் காட்டுகிறேன் என்று ஆரம்பித்து யதார்த்தத்தை தாண்டி உணர்ச்சிக் கொந்தளிப்பில் கொண்டுபோய் முட்டாள்தனமாக முடிந்திருக்கிறது.

படத்தில் இயக்குனர் பல விஷயங்களை திணித்திருப்பது அனுபவமின்மை போல்தான் படுகிறது. May be, முதல் படமாய் இருப்பதால் தனக்கு தெரிந்தது, தன்னை பாதித்தது என்று எல்லாவற்றிலும் கலந்து எடுத்து விட்டார் என்று நினைக்கிறேன். அடிப்படையாக கதையை நகர்த்த படாதபாடு பட்டிருக்கிறார் என்று தெரிகிறது – ஒரு கொலை – ஒரு சாவு என்று turning point மேலே turning point வைப்பதிலிருந்தே கதை டவுன் பஸ்டிக்கட் பின்னாடி எழுதும் அளவுதான் என்று தெரிந்து விடுகிறது. அத்தனை காரக்டர்களும் செத்துப்போய் ஹீரோவும் சாவதில் போய் முடிவதால் செத்த வீட்டுக்கு போய்விட்டு வந்ததுபோல் உணர்வுதான் வருகிறது.

வறுமை, நகரம் – அதன் போலித்தன்மை, இயலாமை, உணர்ச்சிகள், காதல், காமம், நகைச்சுவை, கொள்கை, வீரம் இத்தனையும் அதனதன் அளவில் சேர்த்து முன்பே அழகான காவியங்கள் வடித்திருக்கிறார்கள் – ‘வறுமையின் நிறம் சிவப்பு’ நினைவுக்கு வருகிறது. அதனுடன் எல்லாம் இந்த படத்தை ஒப்பிடவே முடியாது.

சரி, படத்தில் பாராட்ட எதுவுமே இல்லையா?

இருக்கிறது. அந்த சிறுவனும் சிறுமியும் – அவர்களிடையே ஊறும் மெலிதான காதல் – இல்லாத ஒருபுலி இல்லாத ஒரு பாலவனத்தை நினைத்து கனவு காண்பது! –

There once was a girl
Tall, lean and fair,
Her hair – her hair
was just the color of ginger !

என்ற rhymesஉடன் அந்த சிறுவர்களின் உலகம் !

‘நாய் வளர்த்தவர்களுக்குதான் அதன் சாவு எப்படி இருக்கும் என்று தெரியும்’ என்பன போன்ற காட்சிகள், பந்து விளையாடும் போது மூர்க்கத்தனமாய் நண்பனை அடிக்க (படத்தின் மற்ற பகுதிகளை பார்த்ததில் அந்த சிறுவனும் செத்துப்போய் விடுவான் என்று நினைத்தேன்), தகப்பனைப்போன்ற பாசத்துடன் அந்த ஹாஸ்டல் வார்டன் வரும் காட்சிகள், மஹாராஷ்ட்ராவின் கிராமச்சூழல், ஒரு நண்பனும் இல்லாமல், உறவுக்காரர்களும் இல்லாமல் தனித்துவிடப்பட்ட சூழலின் அழுத்தம், எல்லா வழிகளும் அடைபட்டு உள்ளே தூங்கும் மிருகம் விழித்து இயலாமையின் உச்சத்தில் நடக்கும் அந்த முதல் கொலையை காட்டியவிதம், காதலையும் காமத்தையும் கொஞ்சம் subtleஆக சொன்னது என்று இயக்குனருக்கு இவைகளில் ஒரு சபாஷ் போடலாம்தான்.

அந்த மருத்துவரை சந்திக்கிற காட்சியில் ஜீவாவின் நடிப்பு மிக அருமை. சிறுவயது பிரபாகரனாக நடித்த அந்த சிறுவன் நடிப்பும் மிக அருமை. கருணாஸ் தன் கிண்டலில் சூழ்நிலையின் அழுத்தத்தை குறைக்க முயற்சித்து நம்மை கதையிலிருந்து வெளியே இழுத்து விடுகிறார். அதை தவிர்த்து வேறுமாதிரி எடுத்திருக்கலாம் – இருந்தாலும் நன்றாகத்தான் இருந்தது.

கதையில் ஒரு தலைப்பட்சமாக (கணினியைப்பற்றி அதிகம் தெரியாத – அதன் பலன் என்னவென்று புரிந்துக்கொள்ளாதவர்களிடமெல்லாம் கருத்துக்கேட்டு) சொன்னது குறை. கஷ்டப்பட்டு படித்து வேலை தேடி சம்பாதிப்பவர்களை அவமானப்படுத்துவது தவறான செயல். முன்பெல்லாம் சைக்கிளில் போய்க்கொண்டிருந்த real estate brokerகள் இன்று scorpioவில் போகிறார்களே! என்றோ, வெறுமனே உடம்பைக்காட்டி ஆடிவிட்டு நடிக-நடிகைகள் கோடி ரூபாய் வரை சம்பாதிக்கிறார்களே என்றோ ஒருவர் பொறாமைப்படுவதில் அர்த்தம் இருக்கிறதா? இருந்தாலும் இது ஏதோ ஒரு பெரிய ப்ரச்னை போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிற இயக்குனர் சாமர்த்திய சாலிதான் !

Advertisements
6 Comments leave one →
 1. Rajesh permalink
  October 16, 2007 9:26 pm

  review is nice. It looks you are angry over the director 🙂

 2. October 19, 2007 9:41 pm

  Nice review ! I expected some thing like this will be there in the movie…well it is there it seems

 3. Mohan permalink
  October 21, 2007 10:36 pm

  Good review. Director told in the interview that murugan (who is selling in train) is a real character. Whether director can show me a single person who studied B.Sc (computer science) is earning Rs. 2 to 3 Lakhs per month in chennai at the age of 26/27 ?Why these persons are creating false image to the public.. Story without reality..

 4. Vidya Deepak permalink
  November 20, 2007 10:06 am

  common sense says 2-3 lakhs per annum. that is definitely possible

 5. November 20, 2007 10:32 am

  Thanks Rajesh, Sami, Mohan, Vidya Deepak… All are welcome – please come and see this blog often 🙂

 6. saar permalink
  June 27, 2009 3:38 pm

  பாதிங்கணா சார், ஹீரோ சந்தோசமா படிக்கிறார் நல்ல வேலை கிடைக்கல, சந்தோசமா அப்பா அம்மாவோட சிரிக்கிறார் ஆனா அவுங்க செத்து போயுடுரங்க, அப்புறம் காதல் செய்யுறார் அப்புறம் காதல் தோல்வி, அப்புறம் போலீசுல அடி வாங்குகிறார், அப்புறம் கொலை பண்றார், அப்புறம் இன்னொரு கொலை, அப்புறம் இன்னொரு கொலை, அப்புறம் அவுரும் செத்து போறாரு சார் செத்து போறாரு. அப்புறம் சார்…(கதை சொன்னவர் அடித்து கொலை செய்ய படுகிறார்).

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: