Skip to content

I have become a Duracell bunny !

September 28, 2007

bunny.jpgசில விசித்திரமான மனிதர்கள் இருக்கிறார்கள் – விடாக்கண்டர்கள். ஒரு பொருளை தருவதாக சொல்லிவிட்டாலோ, ஒரு காரியம் நடக்க வேண்டும் என்றாலோ, அலைச்சலோ, கஷ்டமோ பார்க்காமல் அலைந்து திரிந்து சாதித்து விடுவார்கள். ஏழு கடல், ஏழு மலை தாண்டி, இருட்டு குகைக்குள் இருநூறு காதம் நடந்து ஒரு கிளிக்கூண்டை எடுத்து வரவேண்டும் என்றாலும் அத்தனையும் செய்து விட ரெடியாக இருப்பார்கள்.

இப்படிப்பட்ட சிலரை “ஏஜெண்டு”களாக அரசாங்க அலுவலகங்களில் பார்க்கலாம் – எல்லா “formalities”-ம் செய்துவிடுவதாக சொல்லி அத்தனை டாக்குமெண்டுகள், கையெழுத்துக்கள் (Of course, கையூட்டுக்கள்) எல்லாம் முடித்து வேலை நடத்தி இதையே ஒரு தொழிலாகவும் செய்து வருபவர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களைப் பார்த்தால் “India is just wasting such precious man power!” என்றுதான் தோன்றும். And in fact, இது மாதிரி மக்களில் பலர் ஏமாற்றுப்பேர்வழிகளும் கூட – அதெல்லாம் part of the job என்று விட்டுவிட வேண்டியது தான் !

நான்கைந்து மாதங்களுக்கு முன் இப்படித்தான் நானும் ஒரு பெரிய வேலை தொடங்கி வகையாக மாட்டிக்கொண்டேன் – வேறென்ன வீடு வாங்குவது தான். ஐயோ.. I was feeling like I have become a duracell bunny ! ஓட்டமாக இங்கும் அங்கும் ஓடிக்கொண்டே இருந்தேன் – வேலை முடிந்தபிறகு அப்பாடா ! என்று ஆகிவிட்டது. இனி இவ்வளவு கஷ்டத்தை இழுத்து விட்டுக்கொள்வதில்லை என்று முடிவெடுத்துக்கொண்டேன்.

***

இந்த மாதிரி வேலை செய்வதை வைத்து ஒரு கதை இருக்கிறது – அதாவது, பூதம் ஒன்று ஒரு மரத்தில் வசித்து வந்ததாம் – அந்த மரம் இருந்த வழியாக வந்த விவசாயி ஒருவன் மரத்தைப்பார்த்து விட்டு நான்கு ஆட்களையும் அழைத்து வந்து மரத்தைக்காட்டி “அதைத்தான் வெட்டவேண்டும்” என்று சொன்னானாம். தான் வாழ்ந்து வரும் மரத்தை விட விருப்பமில்லாமல், ஆசையால் அந்த விவசாயியிடம் ஓடிச்சென்ற பூதம், “ஐயா! மரத்தை வெட்டி விடாதே! உனக்கு நான் உதவியாக எடுபிடியாக இருப்பேன்…” என்றது.

பூதத்தைப் பார்த்து முதலில் பயந்த விவசாயி பின் தெளிந்து, “நான் எள் வியாபாரி.. எள்ளுச்செடிகளை பறித்து நல்லெண்ணையாக ஆட்டி விற்பேன். எனக்கு எப்படி நீ உதவமுடியும்?” என்றான். பூதம் “நான் உனக்கு தினமும் கலம் எள் பறித்து வந்து தருகிறேன்… இந்த மரத்தை வெட்டாதே” என்றது. விவசாயியும் ஒத்துக் கொண்டு போய்விட்டான்.

நாள்கள் செல்ல செல்ல, அக்கம் பக்கத்திலிருந்த எள் விளையும் இடங்களெல்லாம் பூதம் எள் சேகரித்து விட்டது. இப்போது எள் கிடைப்பது சிரமமாகி பலமணி நேரங்கள் எள் விளையும் இடங்களை தேடி தேடி பறித்து வரவேண்டியதாகி விட்டது. இதனால் முதலில் ஆசையாக தங்கி இருந்த மரத்தின் பக்கம் கூட அந்த பூதம் வருவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

நடுவே ஒருநாள் மரத்தின் பக்கம் வந்தபோது, அங்கே ஒரு புது பூதம் ஹாய்யாக வீற்றிருந்தது கண்டு வயிற்றெரிச்சல் பட்டு, “ஏய்! இது என் இடம்.. இங்கிருந்து போய்விடு” என்றது. புது பூதம் “நான் பலநாட்களாக இங்கே தானே இருக்கிறேன்… இப்போது திடீரென்று நீ வந்து உன் இடம் என்கிறாயே!” என்றது. நமது பழைய பூதம் ஓ வென்று அழுது தான் மாட்டிக்கொண்டதையும் தன் கஷ்டத்தையும் சொன்னது. இரக்கப்பட்ட புது பூதம் “நான் போய் அந்த விவசாயியை கொன்று விடுகிறேன்! நீ விடுதலை அடையலாம்!” என்றது.

அதன் படி புது பூதம் விவசாயியின் வீட்டு மாட்டுத்தொழுவத்தில் ஒளிந்து கொண்டது. அப்போது பார்த்து விவசாயி வெளியே வந்து தன் வேலையாள் ஒருவனை அழைத்து அந்த மாட்டு தொழுவத்தில் இருக்கும் புதியதை பிடித்துக்கொண்டு வா.. அதற்கு லாடம் கட்ட வேண்டும்” என்றானாம். இதைக்கேட்டதும் விவசாயி பெரிய மந்திரவாதியோ என்று பயந்து புது பூதம் ஓடி வந்து விவசாயியின் காலில் விழுந்து “என்னை மன்னித்து விடு.. நான் உன் அடிமை.. என்னை கொன்று விடாதே! அந்த பூதம் கலம் எள் தானே கொண்டு வருகிறது.. நான் உனக்கு கலம் நல்லெண்ணையே ஆட்டி தந்து விடுகிறேன்!” என்றது. இதெங்கேயிருந்து வந்தது, நாம் புது மாட்டைத்தானே சொன்னோம் என்று நினைத்த விவசாயி இருக்கட்டும் என்று சரி அப்படியே செய் என்று ஒத்துக்கொண்டான்.

எள் கொண்டு வருவதே கஷ்டம் – எண்ணையும் வேறு ஆட்டி கொடுப்பது என்பது மிக மிகக்கடினம். புது பூதம் வகையாக மாட்டிக்கொண்டு ஓடி ஓடி உழைத்துக்கொண்டேஏஏ இருந்தது – இப்படி முடியும் அந்த கதை.

Advertisements
One Comment leave one →
  1. October 2, 2007 9:52 am

    >I was feeling like I have become a duracell bunny !
    LOL!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: