Skip to content

Indian Veda entering Pop culture

September 24, 2007

சமீபத்தில் வரும் படங்களில் வேத மந்திரங்கள் ஒரு voodoo effect-உடன் உபயோகப்படுத்தப்படுகின்றன. cinema, western, megaserials என்று பல இடங்களில் கண்ட மேனிக்கு உபயோகப்படுத்துகிறார்கள்.

ஒரு தொலைக்காட்சி தொடரில் கூட கோபமாக கொலை வெறியுடன் கிளம்பி கதாநாயகி செல்லும் போது பின்னணியில் வேதமந்திரம் ஒலிக்கவிட்டார்கள். அவ்வளவு ஏன், கீதையின் ஸ்லோகம் ஒன்றை சொல்லிக்கொண்டே தானே ‘அன்னியன்’ எதிரிகளை கொல்லுகிறான்… பாபா படத்தில் magic போல மந்திர ஒலிகளை பயன்படுத்தினார்கள். நல்லவேளை அந்த படம் வெற்றி பெற்றிருந்தால் இதுவே ஒரு trend ஆகி இருக்கும்.

காலம் மாறியதற்கேற்ப வேதமந்திரங்களின் உபயோகமும் மாறிக்கொண்டு வருகிறது. ஆராய்ச்சி செய்வோர் ஒருபக்கம், அலட்சியம் செய்வோர் ஒருபக்கம் என்று இருந்தாலும், விஷயம் தெரியாவிட்டாலும் உபயோகித்துக்கொள்வோம் என்று நிறைய பேர் வந்து விட்டார்கள். இது எவ்வளவு தூரம் சரி என்று தெரியவில்லை.

மேலே சொன்னது போல வெறும் பயங்காட்ட இல்லாமல், இன்னமும் வேதமந்திரங்களுக்குரிய மரியாதை கொடுப்பவர்களும் மீடியாவில் இருக்கிறார்கள். இளையராஜா நிறைய படங்களில் உள்ளபடியே பக்தியுடன் வேதமந்திரங்களை உபயோகப்படுத்தி இருக்கிறார். A.R ரஹ்மான் எனக்கு தெரிந்து வேத மந்திரத்தை உபயோகித்தது அலைபாயுதேவில் வரும் ‘மாங்கல்யம் தந்துனானே’.

இங்கே ஒருவர் Pop beat-ல் வேத கோஷத்தை அமைத்திருக்கிறார் கேட்டு பாருங்கள்.

Veda ப்ரெட் என்று ஒரு ரொட்டி இருக்கிறது தெரியுமோ?🙂

No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: