Skip to content

My New Nokia N73 Music edition

September 22, 2007


என் கையில் கட்டியிருக்கிற வாட்சைவிட சற்றே அதிகமான எடையில் கருப்பு வர்ணத்தில் பளபளவென்ற மினுமினுப்புடன் வாங்கிய பின்தான் நச்சரிப்பு ஓய்ந்தது. “என்னப்பா, bubbly fellow வாச்சே நீ… இப்போ என்ன புதுசா வாங்கியிருக்க… இன்னுமா mobile மாத்தலை?” என்று உசுப்பேத்தி உசுப்பேத்தியே வாங்க வைத்து விட்டார்கள். நான் இத்துடன் ஐந்தாவது மொபைல் வாங்குகிறேன்.

முதலில் ஒரு rheostat சைசுக்கு ஒரு Nokia, பிறகு அந்த end-ல் nuclear bomb வெடித்தாலும் சின்னதாய் beep சவுண்ட் மட்டுமே கேட்கும் ஆனால் அழகான siemens, பிறகு ஒரு sturdyயான motorola, அதன் பிறகு அவார்டு வாங்கிய Samsung D500 – இதெல்லாம் நான் முன்பு வைத்திருந்த சில மாடல்கள்.

என் Samsung D500 ஐ exchange பண்ணலாம் என்று போனால், மூன்று நாள் constipation வந்ததைப்போல முகத்தை வைத்துக்கொண்டு, ஒரு 1500-2000 தான் கொடுக்கலாம் என்றான். அந்த மொபைல் வாங்கியபோது 18000 ரூபாய். மனசு வராமல் நானே வைத்துக்கொள்கிறேன் என்று எடுத்து வந்து விட்டேன். பிறகு ஒரு முறை, Sony Ericsson மொபைல் வாங்கலாம் என்று போனால், “சார், sony failure மாடல் சார்.. battery life ரொம்ப கம்மி” என்று என்னை discourage பண்ணினார்கள்.

பிறகு internet-ல் தேடி, அலைந்து review எல்லாம் படித்து கடைசியில் இந்த மாடல் வாங்கினேன். ஒரு குரலில் எல்லா reviewவிலும் சொல்வது இந்த மாடலில் music, camera இரண்டும் top class என்று. பார்க்க வேண்டும். அதோடு FM radio வேறு இருக்கிறது.

வாங்கிய கையோடு,

Hutch changed to vodaphone,
So did I changed my phone,
Take note of this number,
‘Coz it’s Srikanth! remember !

என்று ஒரு டஜன் பேர்களுக்கு SMS அனுப்பிய பின் தான் நச்சரிப்பு ஓய்ந்தது.

The future, according to some scientists, will be exactly like the past, only far more expensive.

2 Comments leave one →
  1. amutha permalink
    December 14, 2007 10:19 am

    hai.. u r really interesting yaar… better late than never enbathan artham ippo thaan puriyarathu….. take care

  2. December 14, 2007 10:30 am

    @amutha: Thanks🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: