Skip to content

Books and memory power

September 10, 2007

childreading.gif
வருடா வருடம் NewYork Times ஒரு நூறு புத்தகங்களை அந்த ஆண்டின் சிறந்த படைப்பாக தேர்ந்தெடுத்து வெளியிடுகிறது. இதில் fiction, non-fiction, poetry என்று பலதும் இருக்கும். இதைப் பார்க்கும்போதெல்லாம் நூறு புத்தகங்களை ஒரு வருடத்திற்குள் படிக்க முடியுமா என்று தோன்றும்.

பொதுவாக non-fiction வகைகளில் biography, speeches, articles போன்றவை சுவையாக எழுதுபவர்கள் எழுதினால் கீழே வைக்காமல் படித்துக்கொண்டே போகலாம். நேர்மாறாக சில கதைகள் வளவள வென்று படிப்பதை நிறுத்தவும் முடியாமல் படித்து முடிக்கவும் முடியாமல் கழுத்தறுத்து விடும்.

சில புத்தகங்களில் கலைச்சொற்கள், referenceகள் ஏராளமாக கொடுத்து விடுவார்கள். – அந்த புத்தகத்தை படிக்கும் போது நாம் அது சம்பந்தமாக வேறு புத்தகங்களை தேட வேண்டியிருக்கும். இங்க்லீஷ் நாவல் படிக்கும்போது டிக்ஷனரி தேடுவதில்லை? 😉 – ஆனால் நான் அதை சொல்லவில்லை – உதாரணத்திற்கு Michael Crichton போன்ற நாவலாசிரியர்களின் நாவல்களில் extraவாக இதர விவரங்கள் வரும் – அதைப்பற்றி வேறு புத்தகங்களிலோ, internet-லோ தேடவேண்டிவரும் – அந்த இடங்களிலிருந்து இன்னொரு இடம் – என்று முதலில் படித்த புத்தகத்தை அடிக்கடி விட்டு விடுவேன்.

இன்னும் சில புத்தகங்கள் ஒரே மூச்சில் படிப்பதற்காக எழுதப்பட்டதாகவே இருக்காது – உதாரணத்திற்கு, encyclopedia, chiken soups புத்தகங்கள். அத்தகைய புத்தகங்களை ஒரே மூச்சில் படிப்பது ஒரு அயற்சியை தரும். ஆனால் அப்படி படிப்பவர்களும் இருக்கிறார்கள். இரான் நாட்டு சுல்தான் ஒருவர் தன் டைட்டிலில் என்ஸைக்ளோபீடியா முழுவதையும் படித்தவர் என்று போட்டுக்கொண்டாராம். எப்படி எல்லாவற்றையும் ஞாபகம் வைத்துக்கொண்டாரோ !

படிக்க படிக்க ஞாபகத்தில் நிறுத்தாமல் ஆவியாகிப்போய்க் கொண்டிருந்தால் எதற்கு படிப்பது? நினைவில் தேக்கினால்தானே நன்மை. இதுபற்றி இரண்டு incidents நினைவுக்கு வருகிறது.

ஒன்று ஆதிசங்கரரின் சீடர் ஒரு புத்தகம் எழுத ஆரம்பித்தார். அது ஆதிசங்கரரின் பாஷ்யத்திற்கு எழுதப்பட்ட விரிவுரை. அதை ஆதிசங்கரரிடமும் காண்பித்தார். ஐந்து பாகங்கள் எழுத முடிக்கும்போது தடங்கல் ஏற்பட்டு எழுதப்பட்டவை அழிக்கப்பட்டன. சீடரால் திரும்பவும் எழுத இயலவில்லை. அவர் முறையிட்ட போது, சங்கரர் தன்னிடம் காண்பித்த பகுதிகள் இன்னும் நினைவிருக்கிறது என்று சொல்லி எழுதிய வரைக்கும் ஞாபகப்படுத்திக்கொண்டு திரும்ப சொன்னாராம். அந்த விரிவுரை அந்த மட்டில் காப்பாற்றப்பட்டது.

இன்னொன்று ராமானுஜரின் சீடர் கூரத்தாழ்வார் பற்றியது. ராமானுஜரும் கூரத்தாழ்வாரும் காஷ்மீரத்தில் போதாயன தர்ம சூத்திரம் என்ற புத்தகத்தை பெற்று திரும்பும் போது அவர்களை பிடிக்காதவர்கள் அந்த புத்தகத்தை அபகரித்தனர். இதனால் ராமானுஜர் வருந்தினார். அவரது சீடரான கூரத்தாழ்வான் தான் அந்த புத்தகம் முழுவதும் ஒரே இரவில் படித்துவிட்டதாகவும் திரும்ப அந்த புத்தகத்தை வார்த்தைவிடாமல் சொல்ல முடியும் என்றும் கூறி அந்த புத்தகத்தின் விஷயங்களை ஒப்புவித்தார்.

இதெல்லாம் அபூர்வமான ஞாபகசக்தி!

இத்தனை ஞாபகசக்தி இல்லையென்றாலும் கொஞ்சமாவது ஞாபக சக்தி இல்லையென்றால் எத்தனை படித்தும் உபயோகமில்லை. இதில் ஒரு விஷயம் – கதைகள் பெரும்பாலும் மிக நன்றாக நினைவுக்கு வரும் – மற்ற பாடல்களோ, கட்டுரைகளோ தான் மறந்து விடும். ஒரு மனவளக்கலை நிபுணர் ஒருவர் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தார்.

அதில் அவர் ஒன்றுக்கொன்று சம்பந்த மில்லாமல் பத்து பதினைந்து பொருள்களின் பெயர்களை (உதாரணமாக ஐஸ்வர்யாராய், குற்றாலம், கிரிக்கெட் etc.) சொல்லி இதை திரும்ப சொல்லுமாறு கேட்டார் – பார்வையாளர்கள் ஒருவராலும் சொல்ல முடியவில்லை. அதையே ஒரு கதையாக (ஐஸ்வர்யாராய் குற்றாலத்தில் கிரிக்கெட் பார்த்தார்) என்று சொன்னவுடன் எல்லோருமே கிட்டத்தட்ட சரியாக எல்லா பெயர்களையும் அந்த கதையிலிருந்து நினைவு கூர்ந்தார்கள் !

இதுமாதிரி கதையாக படித்துக்கொண்டு போனால் கூட வெகுநாட்களுக்கு நினைவிருக்காது. அப்படி வெகுநாட்களுக்கு நினைவிருக்க வேண்டுமானால் படித்ததை திரும்ப நினைத்துப் பார்க்க வேண்டும். தமிழ் தாத்தா உவேசா அவர்களின் ஆசான் ஒருவர் பாடம் கேட்க ஒருவரும் வராத தினத்தில் தன் எதிர் வீட்டிலிருந்த செவிட்டு மனிதருக்கு பாடம் நடத்தினாராம் – ஏனெனில் படித்ததை அடுத்தவருக்கு சொல்லிக்கொடுப்பதன் மூலம் தனக்கும் அது மறந்து போகாமல் மேலும் வளர்த்துக்கொள்ளவும் உதவும் என்ற காரணத்தினால். அதுபோல நாம் படித்ததை மற்றவர்களுக்கு சொல்லலாம் – ஆனால் அதில் அபாயம் என்னவென்றால் – நம்மை கண்டாலே பலர் ஓட ஆரம்பித்து விடுவார்கள். நமக்கும் wikipedia அல்லது இன்னும் மோசமாக blade என்று பட்டபெயர் வந்து விட வாய்ப்புண்டு;

MGR படம் ஒன்று நினைவுக்கு வருகிறது. “ராமன் தேடிய சீதை” என்று நினைக்கிறேன் – அதில் MGRன் மாமனாராக நடிப்பவர் இம்மாதிரி எல்லாம் தெரிந்தவராக வளவள வென்று பேசிக்கொண்டே இருப்பார். “நம்ம ஷேக்ஸ்பியர் யார் தெரியுமோ? சேஷப்பையர் தான் அவன் – இங்கதான் திரிந்துட்டு இருந்தான்” என்று கதையளக்கவும் கேட்பவர்கள் ஓட ஆரம்பித்து விடுவார்கள்.

இதுபோன்ற அபாயம் இல்லாமல் தப்பிக்க Blog எழுதுவது ஒன்றே வழி. “நீங்கள் படித்தாலென்ன படிக்கவில்லை என்றால் என்ன – எனக்கு தெரிந்ததை, நான் படித்ததை ஞாபகப்படுத்திக் கொள்ளவாவது எழுதுவேன்” (சத்தியமா நான் அப்படி நினைக்கவில்லை 🙂 ) என்று எழுதிக்கொண்டே இருக்கலாம். பட்ட பெயர் கெட்ட பெயர் எல்லாம் வராது.

Advertisements
2 Comments leave one →
  1. amutha permalink
    September 14, 2007 12:59 am

    ada paavi..

  2. September 14, 2007 7:43 am

    Ah! LOL.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: