Skip to content

Shooter (2007)

September 5, 2007

shooter.jpg

Shooter படம் ஏற்கனவே ஹிட் ஆன Rambo, Enemy of the state, Bourn Identity போன்ற படங்களின் வரிசையில் இன்னொரு படம். முழுவதுமாக action thrillerஆக எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தின் trailerஐ இங்கே பார்க்கலாம்.

ஆப்பிரிக்க நாட்டில் நடை பெற்ற ஒரு சண்டையில் உயிர் தப்பி, தன்னை ஆபத்தில் கைவிட்டு விட்டுப் போன militaryயில் வெறுப்புற்று ஓய்வு பெற்று தனிமையில் வாழும் ஹீரோ. அவன் armyயில் ஒரு sharp shooter. அதிக தொலைவிலிருந்து குறிதவறாமல் சுடும் marksman. திறமையானவன்.

படத்தில் திடுக்கிட வைக்கும் headshots காட்சிகள் தான் மேலே சொன்ன மற்ற படங்களிலிருந்து இந்த படத்தை வித்தியாசப்படுத்துகிறது.

ஒருநாள் CIA ஆட்கள் வந்து ஜனாதிபதி கொலை முயற்சி நடப்பதாகவும் அதை செய்யப்போகும் assasin ஒரு மைல் தூரத்திலிருந்து சுடப்போவதாகவும் ஹீரோவிடம் தெரிவிக்கிறார்கள். அதனால் அந்த முயற்சியை தடுக்க சிறந்த sharp shooterஆன ஹீரோவே ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சித்தால் எப்படி செய்வான் என்று கண்டறிந்து CIAவிடம் தெரிவிக்க சொல்கிறார்கள்.

கடைசி நேரத்தில் ஜனாதிபதிக்கு பதிலாக ஆப்பிரிக்க நாடொன்றிலிருந்து வந்து ஜனாதிபதியுடன் கூட்டத்தில் கலந்து கொண்ட பாதிரியார் ஒருவர் சுடப்படுகிறார் – பழி ஹீரோவின் மேல். அதற்கப்புறம் ஒரே chase sequence தான். இந்த படத்தின் கதை stephen hunter எழுதிய Point of Impact நாவலை தழுவியது.

Mark Wahlbergன் நடிப்பு அருமை – அவரது stamina, speed அபாரம். இந்த படத்தில் ஒரு professional sniper shooter ஒருவரை ஆலோசகராக கொண்டு, மிகத்திறமையாக காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். படத்தில் ஹீரோவுக்கு வலது பக்கம் அடிபட்டுவிட தொடர்ந்து இடப்புறமாக துப்பாக்கியை பிடித்து சுடுவதெல்லாம் interesting techniques. “Iraq-ல் WMD இருப்பதாக பொய் சொன்னோம்!”, “சுதந்திரம் தருகிறோம் என்று சொல்லிக்கொண்டு போட்ட சண்டையெல்லாம் அந்த நாட்டு எண்ணைக்காகத்தான் !” போன்ற வெளிப்படையான வசனங்களும் படத்தில் உண்டு.

ஒரு highspeed political/military/stealth action thriller பார்க்கவேண்டுமானால் இந்த படம் பார்க்கலாம் – நேரம் போவதே தெரியாது ! By the way, rottentomatoes பக்கம் போய்விடாதீர்கள் – இந்த படத்தை அங்கே உள்ள critics அவ்வளவாக விரும்பவில்லை என்று தெரிகிறது🙂

No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: