Skip to content

பஞ்ச் டயலாக் சொல்லவா?

September 2, 2007

rajini3.gif

 

பஞ்ச் டயலாக் என்பது சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்று. ரஜினி எந்த சண்டைக்காட்சியின் முடிவிலும் ஒரு பஞ்ச் டயலாக் சொல்லாமல் விடுவதில்லை என்றாகிவிட்டது. கமலின் Breaking Point டயலாக் நினைவுக்கு வருகிறது. கமலும் விதிவிலக்கல்ல. கேப்டனுக்கு படம் முழுக்க பஞ்ச் பாதி டயலாக் மீதி !

இங்கே இப்படியென்றால் hollywood மட்டும் என்ன வாழ்கிறது? “I will be back!” whosaidit? Yes Big Arny. ஹாலிவுட்டின் சில நூறு பஞ்ச் டயலாக்குகளை இங்கே பார்க்கலாம்

தமிழ் படங்களில் இப்போது இருக்கிறமாதிரி பஞ்ச் டயலாக்குகள் ரஜினி வந்த பிறகு அதுவும் பதினாறு வயதினிலேவிலிருந்து தான் ஆரம்பித்திருக்க வேண்டும். அதில் ரஜினி படம் முழுக்க “இது எப்படி இருக்கு!” என்று ஒரு mannerism ஆக கேட்டுக்கொண்டிருக்க, கடைசியில் கமல் ஒரு பஞ்ச் கொடுத்து “இது எப்படி இருக்கு!” என்று டயலாக் விடுவாரே, அங்கே ஆரம்பித்தது பஞ்ச் டயலாக்.

பஞ்ச் டயலாக்குகளும் சொல்பவர் சொன்னால்தான் எடுபடுகிறது. இந்த வீடியோவை பாருங்கள் – சிவாஜியின் பன்னிபஞ்ச் டயலாக் ஏற்கனவே கிரி படத்தில் வந்தும் யாருக்கும் தெரியாமலே போய்விட்டது.

சிறுகதைகளாகட்டும், புதுக்கவிதை, ஹைகூ என்று எடுத்துக்கொண்டாலும் ஒரு பஞ்ச் லைன் நச்என்று தேவைப்படுகிறது. அதே மாதிரிதான், பெரிய சண்டை போட்டும் ரசிகர்கள் அந்த சண்டையின் objective-miss பண்ணிவிடக்கூடாதே என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

காமெடியில் ஒரு புத்திசாலித்தனத்தையும் நம்மால் காண்பிக்க முடியவில்லை. வழக்கமாக ஒரு slapstick காமெடி என்ற அளவிலேயே இருக்கிறது. காமெடியில் பஞ்ச் வைத்தவர்கள் எல்லாம் ரிடையராகி விட்டார்கள். அதனால் ஹீரோக்களும் இப்படி இறங்கி வந்து பஞ்ச் டயலாக் பேசி விருவிருப்பூட்ட வேண்டியிருக்கிறது.

5 Comments leave one →
  1. senthamizh permalink
    September 5, 2007 4:45 am

    16 வயதினிலே படத்தில் கவுண்டமனி கூட பஞ்ச் டயலாக் பேசினார்.

    தமிழ் திரைப்படங்களின் தலைசிறந்த 10 வசனங்களை என் பதிவில் வெளியிட்டு இருக்கிறேன். ஒரு நடை வந்து செல்லவும்.
    http://senthamizh.wordpress.com

    நன்றி.

  2. September 5, 2007 8:10 am

    Thanks senthamizh, I would do certainly.
    (Whoa, after writing this, I just went there but I couldn’t find any post – you had mentioned above.. ?! )

    By the way I don’t know for some reason your comment got into spam (akismet)… May be you should contact tech. support in wordpress.

    Yesterday I thought the following post is a bit over-reacting:
    http://paulbaylay.wordpress.com/2007/09/04/i-hate-wordpress/

    But having seen your legitimate comment getting into spam, I now suspect akismet and i think it should be made optional.

  3. senthamizh permalink
    September 5, 2007 11:10 pm

    i do agree with u!

  4. senthamizh permalink
    September 5, 2007 11:38 pm

    நேற்று அப்பதிவை போட மறந்து விட்டேன், மன்னிக்கவும். இன்று போட்டுவிட்டேன்.

Trackbacks

  1. Go ahead, Make my day ! « Manoranjitam

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: