Skip to content

Vadapalani Murugan kumbabishekam

August 30, 2007

பக்தஜன கோலாகலன்

vadapalani.jpg

வடபழனி முருகன் கோவிலுக்கு இன்று(30-Aug-2007) கும்பாபிஷேகம். சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் விமரிசையாக நடைபெறுகிறது. தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சிவாச்சாரியார்கள் ஓதுவார் பெருமக்கள் எல்லோரும் வந்து விமரிசையாக நடத்தி வைக்கிரார்கள். பல ஆயிரம் மக்கள் திரண்டு வந்து தரிசிப்பர். தொலைக்காட்சி சானல்கள், மற்றும் வானொலியிலும் நேரடி ஒளி/லிபரப்பு நடைபெறும். (Update: See photos in here).


ஏறத்தாழ நூற்றிருபத்தைந்து வருட பழமையான கோவில் இது. முதலில் சிறிய கொட்டகையாக இருந்து கிருபானந்த வாரியார் போன்ற ஆன்மீக செம்மல்களால் தற்போதைய நிலைக்கு எழுப்பப்பட்டுள்ளது. இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு வருடத்துக்கு சில நூறு திருமணங்கள் இந்த கோவிலிலேயே நடைபெறுகின்றன. கோவிலுக்குள்ளேயே திருமணம் செய்வதற்கேற்ற இட வசதி உள்ளது.

கும்பாபிஷேகத்தைப்பற்றி ஒரு குறிப்பு. கும்பாபிஷேகம் என்பது கோபுரகலசங்களுக்கு அபிஷேகமாக கும்ப-அபிஷேகமாக செய்வது. இதில் வேறொரு முறையும் உண்டு – அதை மஹா கும்பாபிஷேகம் என்பதுபோல் – மஹா சம்ப்ரோக்ஷணம் என்பர். பொதுவாக வைணவ திருத்தலங்களில் சம்ப்ரோக்ஷணமே செய்வார்கள் – சம்ப்ரோக்ஷணம் என்பது நீரை தெளிப்பது – அபிஷேகமாக இல்லாமல் கீழிருந்து மேலாக நீரை தெளித்து பூஜை செய்வதாகும் – இதெல்லாம் அந்த அந்த கோவில்களில் கடைபிடிக்கப்படும் ஆகமத்தை பொருத்தது.

***

என்தவமோ? ஏரார்ந்த எந்தை இயற்றியதோர்
முன்தவமோ ஏதென்பேன்? மூவிரண்டு – பொன்முகத்தான்
வைத்தான் பெருங்கருணை; வாழ்வுற்றேன்; என்நாவில்
தைத்தான் அவன்திருப்பேர் தான்.
– ‘சரவண சதகம்’ (வாலி)

2 Comments leave one →
  1. September 3, 2007 9:45 am

    Nice to know..it is such a nice temple.. have visited the temple several times as Saligramam is the place i lived.. such a nice temple it is. thanks for this post..

  2. September 3, 2007 8:46 pm

    Yes siva, In chennai very few temples are my favorites –
    Lus pillaiyar,
    Gangadhareswarar koil in nungambakkam (kodampakkam?),
    Kapaleeswarar koil,
    and vadapalani aandavar koil,
    Maangadu kaamaatchi amman koil.

    When I go to one of these temples I really feel the peace.

Leave a reply to Srikanth Cancel reply