Skip to content

நூறாவது குரங்கு விளைவு

August 11, 2007

ஜப்பானில் ஒரு தீவில் குரங்குகளுக்கு அவை உண்ணும் பழங்களை கடல் நீரில் கழுவி உண்ண கற்றுக் கொடுக்கப்பட்டது. சில காலம் கழித்து பார்த்தால் கற்றுக்கொடுக்கப்பட்ட குரங்குகளிடமிருந்து அந்த தீவிலுள்ள மற்ற குரங்குகளும் கற்று கொண்டுவிட்டன. அது மட்டுமில்லாமல் இதே பழக்கம் பக்கத்து தீவிலும் பரவி விட்டது. இதுவே நூறாவது குரங்கு விளைவு எனப்படும். (See also: http://www.infinitebeing.com/0507/monkeys.htm)

அதாவது எதாவது ஒரு பழக்க வழக்கம் ஒரு குறிப்பிட்ட குழுவில் சமூகத்தில் புதிதாக உருவானால் அது கற்றுக்கொடுக்கப்படாமலே மற்ற சமூகங்களிடமும் பரவிவிடுகிறது. இங்கே நூறு என்பது ஒரு குத்து மதிப்பான அளவுதான். ஒரு வழக்கம் இந்த அளவுக்கு மேலதிகமானவர்களால் கடைபிடிக்கப்படுமானால் அது தானாகவே இதர மக்களிடமும் பரவக்கூடும். எல்லா சமூக பழக்க வழக்கங்களையும் இப்படி சொல்லிவிட முடியாது என்றாலும் சில வழக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

எனக்கு தெரிந்து சட்டென்று நினைவுக்கு வருவது எல்லா மொழிகளிலும் ஏறத்தாழ ஒரே மாதிரியான பழமொழிகள் (idioms & phrases) இருப்பது, உலகின் மிகப்பழமையான மதங்களிலிருந்து நேற்று பிறந்த scientology மதம் வரை கடவுளை கோவில் கட்டி கும்பிடுவது, உலகப்போர்களின் போது அனேகமாக எல்லா நாடுகளும் தினவெடுத்து அலைந்தது போன்ற சிலவற்றை சொல்லலாம்.

பொதுவாக ஒரே பழக்கத்தை கண்மூடித்தனமாக பின்பற்றுவதற்கு செம்மறி ஆடுகளை சொல்வார்கள். (கூட்டமாக செல்லும் செம்மறி ஆடுகளில் முதலில் ஓடும் குட்டியை திசை மாற்றி திருப்பி விட்டால் போதும் – எல்லா ஆடுகளும் அதையே பின்பற்றி ஓடும்). இது அப்படி அல்ல – அதைவிட சற்று புத்திசாலித்தனமானது என்று வைத்துக்கொள்ளலாம்.

* * *

போனவாரம் எழுத ஆரம்பித்த Spec எப்போது முடிக்கப்போகிறாய்? ” என்று மிரட்டல் போன்கால் இப்போது வந்தது. நான் எழுதும் வேகத்தை நினைக்கும் போது எனக்கு இன்னொரு குரங்கு தியரி தான் ஞாபகம் வருகிறது.

ஒரு குரங்கு டைப் ரைட்டர் முன் உட்கார்ந்து இரு கைகளிலும் உள்ள ஆட்காட்டி விரல்களால் லொக் லொக்என்று random ஆக தட்ட ஆரம்பித்தால் அது Shakespeare-ன் நாடகம் ஒன்றை டைப் அடித்து முடிக்க எவ்வளவு நாட்கள் ஆகும்? என்பது தான் அது – Infinite monkey theorem.

One Comment leave one →
  1. Jagan permalink
    August 18, 2007 11:50 am

    Srikanth,
    Thanks. It’s an interesting information. I believe you will also be interested in “Russell’s Paradox”.
    Jagan
    Doha

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: