Skip to content

The obesity epidemic

August 7, 2007


அரிசி ஆகாது – கார்போஹைட்ரேட் கூடாது – எடை கூடிவிடும். எனக்கு பிடித்த இட்லி-தோசை – நினைத்தே பார்க்கக்கூடாது – உளுந்து அவ்வளவும்
Fat. சரி கொஞ்சம் கோதுமை சப்பாத்தி – கோதுமை சாதம் – ஒரு வேளை சாப்பிடலாம் – ஆனால் ரொட்டீனாக பிடிக்காது. வெறும் பட்டினியா? கூடாது அல்சர் வந்துவிடும். Non-veg பழக்கமில்லையோ – பிழைத்தேன்.

நார்சத்துள்ள கீரை பழமாக சாப்பிடு என்றால் அதெல்லாம் பழக்கத்தில் கொண்டு வருவது ரொம்ப கடினம். In this fast life, we really can’t do one thing – habituating ! இருந்தாலும் ஓவர் வெயிட். VLCC மாதிரி எதாவது போகலாம் – போகக்கூடாது என்று இரண்டு பக்கமும் பேசுகிறார்கள். Liposuction எவ்வளவு ஒத்துவரும் என்று தெரியவில்லை. Gym workout நேரமில்லை. என்ன பிழைப்பு இது?

இதெல்லாம் யாரோ ஐம்பது அறுபது வயது ஆள் உடம்பு கெடுவதைப்பற்றி படும் கவலை இல்லை. இருபத்தைந்து வயதுக்குள்தான் இவ்வளவும். ஒரு குண்டு குழந்தையைப் பார்த்து என்ன தோன்றுகிறது? “பாவம்… she is not able to burn her fat”. இந்த obesityக்கு இன்னும் தமிழில் வார்த்தை இருக்கிறதா தெரியவில்லை.

நம்மைச்சுற்றி பார்த்தால் 10ல் 5பேராவது BMI தெரிந்து வைத்திருக்கிறார்கள். கொஞ்ச நாள் முன்பு வரை கொழுகொழுவென்று சதைப்பிடிப்பாக இருந்தால் தான் பெருமை. Now there is a change in trend. இன்னும் BP, sugar என்று எல்லாமே உடல் எடை அதிகரிப்பதால் தான் வருகிறது என்ற பீதி எங்கும்.

இன்று sun tv-ல் காட்டினார்கள் – ஒரு ஆண் பனிக்கரடியின் சராசரி எடை 600கிலோவாம். பொறாமையாக இருக்கிறது ! “The weight loss industry exploits cultural anxieties about fat to sell its customers products that don’t work, over and over again, by convincing those customers that it is they who are defective. The failure of these products is ascribed to the moral weakness of those who purchase them, thus allowing the cycle to go on indefinitely.” என்று நான் சொன்னால் எங்கே நம்பப் போகிறீர்கள்… The Obesity Myth என்ற பக்கத்தைப் போய் பார்த்துக் கொள்ளுங்கள்.

Advertisements
4 Comments leave one →
 1. August 7, 2007 12:44 am

  எதுவும் குறைக்க வேணாம், நீங்க சாப்பிடற மாதிரியே, தினமும் இட்டிலி, தோசை சாப்பிடவும், 6 இட்டிலின்னா, ஒரு வாரம் 6னு ஆரம்பிச்சு, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக் குறைக்கவும். வயிறும் அந்தக் குறைந்த உணவுக்குப் பழகணும் இல்லையா? குறைந்த பட்சமாய் 3 இட்டிலி வரை சாப்பிடலாம். சாப்பிட நேரம் எடுத்துக் கொண்டு, ஒரு இட்டிலியை சாம்பாருடனும், ஒரு இட்டிலியை மிளகாய்ப் பொடியுடனும்,ஒரு இட்டிலியைச் சட்டினியுடனும் சாப்பிடவும், சப்பாத்தியைச் சுட்டுச் சாப்பிடவும். சுடமுடியலைனாலும் கவலை இல்லை, தோசைக்கல்லில் போட்டுப் பிரட்டி எடுத்தாலே போதும், நெய், வெண்ணெய் மூச்! சப்பாத்தி 3 என்றால் அதனுடன் சேர்ந்த காய்கள் நிறைய இருக்கட்டும். கட்டாயமாய்ச் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கவேண்டாம். முடிஞ்சால் பேசாமலும் இருக்கலாம். சாப்பிட ஒரு மணி நேரம் முன்னால் வெதுவெதுப்பான நீர் குடிக்கவும். சாப்பிட்டு முடிந்தபின்னர் ஒரு மணி நேரம் கழித்து வெந்நீர் குடிக்கவும். அடிக்கடி ஒரு கப்பில் வெந்நீர் வைத்துப் பருகவும். தினமும் முடிஞ்ச வரை நடக்கவும். 25 வயது என்பது உண்மையானால் வேகமாய் நடக்கலாம். காலை வேளை நல்லது, முடியாவிட்டால், மாலையில் வைத்துக் கொள்ளுங்கல். கிட்டே இருக்கும் இடங்களுக்கு நடந்தே போங்கள். உணவு குறைப்பதால் எடை குறையாது. அனுபவ பூர்வமான உண்மை! காபி, டீ, ஒரே வேளை போதும். காலையில் கட்டாயமாய் வேணும்னால் ஒரு கப் காபி, காலை உணவுக்குப் பின்னர் கட்டாயமாய்ப் பப்பாளிப் பழம் சாப்பிடவும். முடிஞ்சால் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். வாழ்த்துக்கள். Happy Dieting!

 2. August 7, 2007 12:45 am

  athu sari, chummaa kalaykka illaiye? konjam santhekama irukkee!!!!! 😛

 3. August 7, 2007 10:02 am

  Hello Geetha Sambasivam madam,

  August 7, 2007
  // athu sari, chummaa kalaykka illaiye? konjam santhekama irukkee!!!!!
  kandippa illa. Na kalaykka ippothan kathukkittiurkken… Soon i will catch up 🙂

  // 25 வயது என்பது உண்மையானால் வேகமாய் நடக்கலாம்.
  ithulla kalaykkaradhu… Okay, 25 illa – 1 – 2 kooda irukkalam.

  // Happy Dieting!
  I am moved by your response. Thanks for showing concern.

 4. August 8, 2007 12:24 am

  -நேத்து உங்க ப்ளாக் பார்த்த நேரம் என்ன நேரமோ, அதிலிருந்து போற இடமெல்லாம் “குண்டுப் பிரச்னை” தான்! :))))))))))))))))
  25 அல்லது 1,2 கூட உள்ள ஒரு நபருக்கு நிஜமாவே கலாய்க்கத் தெரியாதுன்ன நம்பறதா வேணாமான்னு சிந்தனையில் தலைவி………. என்ன கொடுமைடா இது சரவணா? :))))))))))))))))))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: