Skip to content

கிரீடம் (2007)

July 30, 2007

கிரீடம் படம் ஒரு அற்புதமான கதை. மலையாளத்தில் மோகன்லால் நடித்து அவார்டு வாங்கிய படம். கதை என்னவெனில், ஹீரோ போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று ஹீரோவும் அவன் தந்தையும் (அவரும் போலீஸ்தான்) விரும்புகிறார்கள்.

ரவுடி ஒருவன் தகறாரில் ஹீரோவின் தந்தையை அடிக்க, ஹீரோ நடுவில் நுழைந்து அவனை புரட்டி எடுத்து விடுகிறான். ரெளடியை அடித்து விட்டதால் பொதுமக்கள் ஹீரோவை புது ரெளடி என்று நினைக்கிறார்கள். ரவுடியின் ஆட்கள் ஹீரோவை தொடர்ந்து தொல்லை கொடுக்க ஹீரோ திரும்பி தாக்குவதால் ஹீரோவின் பெற்றோர்களும் தங்கள் மகன் ஒரு ரெளடியாகிறானோ என்று சந்தேகப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் தான் ரெளடியில்லை என்று ஹீரோ பொதுமக்கள் முன்னால் புலம்புகிறான்.

அடிவாங்கி ஆத்திரமடைந்த ரவுடி, ஹீரோவின் குடும்பத்தை தொடர்ந்து தாக்க, தனது லட்சியத்தை துறந்து, ரவுடியை ஹீரோ கொன்று போலீஸ் அதிகாரியாவதற்கு பதில் குற்றவாளியாகி கதறி அழுகிறான்.

தமிழில் அஜீத் நடிக்க அனில் அம்பானி தயாரிப்பில் வந்திருக்கும் இப்படம் வழக்கமான அஜீத் படங்களை போல மோசமாக எடுத்திருக்கிறார்கள். காட்சி அமைப்போ, நடிகர்களின் திறமையோ, டைரக்ஷனில் புதுமையோ, பாடல்களோ, ஒலி/ஒளி அமைப்போ எதுவும் நன்றாக இருந்தது என்று சொல்வதற்கில்லை. பாடல்கள் ஒன்றுகூட மனதில் நிற்காத போதும், சிவாஜியை மிஞ்சுகிறது விற்பனையில் என்று ந்யூஸ் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த படம் ஒரு 1980-1990 வருட ட்ரெண்டில் எடுக்கப்பட்டது என்று பார்த்த உடனேயே எண்ணம் எழுகிறது. உதாரணமாக நான் ரெளடியில்லை.. ரெளடியில்லை.என்று ஹீரோ அழும்போது, விஜய்-விக்ரம் படங்களாக பார்த்து பழகிய நமக்கு இதற்கு ஏன் அழுகிறான்? ரெளடியென்றால் தானே ஹீரோ? அதற்கு சந்தோஷபடாமல் ஏன் வருத்தப்படுகிறான் என்று தோன்றுகிறது. விவேக் மட்டும் தான் ட்ரெண்டுக்கு ஏற்றார்போல நடித்திருக்கிறார். (த்ரிஷாவை குறை சொல்ல விரும்பவில்லை 🙂 ).

Cape Fear என்றொரு படம் – அதிலும் இந்த மாதிரி தான் ஒரு ரெளடி, ஹீரோ குடும்பத்திற்கு தொல்லை கொடுப்பான். இதை ஒரு psychotic thriller ஆக எடுத்திருப்பார்கள். படத்தின் காட்சி அமைப்பும், இசையும் அப்படி புகுந்து விளையாடி இருக்கும்.

கிரீடம் படத்தை கூட அது மாதிரி thriller ஆக எடுத்திருக்கலாம். A great story – great chance wasted!

6 Comments leave one →
 1. arul permalink
  July 30, 2007 10:02 am

  அஜித் தனது dialog delivery இலுள்ள குறையை முதலில் திருத்த வேண்டும் , இரண்டாவதாக தனக்குரிய சரியான கதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் ,(வாலி, காதல் மன்னன் போல)

 2. Anonymous permalink
  July 30, 2007 12:24 pm

  // காட்சி அமைப்போ, நடிகர்களின் திறமையோ, டைரக்ஷனில் புதுமையோ, பாடல்களோ, ஒலி/ஒளி அமைப்போ எதுவும் நன்றாக இருந்தது என்று சொல்வதற்கில்லை. பாடல்கள் ஒன்றுகூட மனதில் நிற்காத போதும் //

  இதில் ஒன்று கூட உங்கள் மனதில் நிற்காதது வருத்தம் தான். உங்கள் ரசனைக்கு ஏற்றபடி இயக்குநர் படம் எடுக்கவில்லை என்று தெரிகிறது. அது என்ன எல்லாரும் திரில்லர் எதிர்பார்க்குறீங்க. கௌதம் மேனன் செய்த இம்சையோ. !

  எதுவுமே புதுமை இல்லை என்கிறீர்கள்.
  ஆனால், விஜய்-விக்ரம் படங்கள் போல் இல்லை என்பதே வித்தியாசம் தானே ! குறிப்பாக ! நானும் பொறுக்கி, நானும் ரௌடி என்று சொல்லி பெறுமைப்படாமல் இருப்பது (சிறுமைப்படாமல்)

 3. July 30, 2007 2:31 pm

  Dear Anonymous,

  // எதுவுமே புதுமை இல்லை என்கிறீர்கள்.
  ஆனால், விஜய்-விக்ரம் படங்கள் போல் இல்லை என்பதே வித்தியாசம் தானே ! //

  I am not saying anything contrary to this. See my first sentence in the post – The story is a superb one.

  As the storyline details incidents and psychological implications in life, the film, I feel, definitely lacks the spirit or one may say it lacks the emotional trauma.

  You know what, it seems they took a second part for this film in malayalam. I bet, they won’t do it in tamil.

  (I feel compelled to point out to you, see the action/reaction of kamal in ‘kuruthipunal’ movie when he says to Gautami “Engiyum paathukaappilla – evanukkum paathukappilla” – “Nowhere is safe – nobody is safe” when one of his men is found to be betraying).

  Cheers,
  Srikanth

 4. Anonymous permalink
  July 30, 2007 6:39 pm

  I was not referring to the emotional drauma. I was referring to your remarks on the DIFFERENCE associated. Since you’ve acknowledge that it has some difference compared to the films of the heroes u have mentioned, I think the director had arleady mad e a point with his presentatino there ! Right ??

 5. arul permalink
  July 30, 2007 9:53 pm

  I was not referring to the emotional drauma.

  Hi anonymous
  can you please correct your mistake in your sentence before attacking someone with your veil on to protect your timorous attitude

Trackbacks

 1. Vijay incites Kreedam movie clashes? - Ajith fan club vs Trisha admirers « Tamil News

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: