Skip to content

விண்வெளியில் மனிதர்கள்!

June 23, 2007

 

கணக்கிலடங்காத விண்வெளி நமக்குள் நடக்கும் யுத்தங்களாலும் வேறுபாடுகளாலும் இன்னும் உபயோகப்படுத்தப் படாமலேயே இருக்கிறது. நான் நினைக்கிறேன், கடவுளின் விருப்பமும் அதுவானால், வரும் பல நூற்றாண்டுகளில் பிரபஞ்சம் முழுவதும் மனிதர்கள் பரவி வாழத் துவங்குவார்கள் என்று.

ஆனால் தற்காலத்திய அறிவியல் சாதனங்கள் இன்னும் அந்த அளவை எட்டவில்லை. மிஞ்சி போனால் சூரிய குடும்பத்திலேயே சில கிரகங்களுக்கு சென்று விட்டு திரும்பலாம். இன்னும் நிறைய அறிவியல் வளர வேண்டியிருக்கிறது.  ஒரு Einstein, ஒரு Edison போல இன்னொரு மேதையை இறைவன் அனுப்பினால் தான் உண்டு.

 விண்வெளியில் பாதுகாப்பு முறைகள், பிராண வாயுதட்ப வெப்பம், உணவு, குடிநீர், கழிவு பொருட்கள், தொலைத்தொடர்பு, நீடித்த வாழ்க்கையில் மனிதர்களுக்கு உளவியல் ரீதியான பிரச்சனைகள் என்று எவ்வளவோ இருக்கிறது.

பூமியில் வாழும்போது பலவிஷயங்களை நாம் take it for grantedஆக எடுத்துக்கொள்கிறோம். உதாரணத்திற்கு நாம் சாப்பிட உட்கார்ந்தால் தட்டு, ஸ்பூன் போன்றவை அந்தரத்தில் மிதக்குமோ என்று கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் விண்வெளியில் எல்லா சிறிய பெரிய பொருட்களும் நகராமல் இருக்க விசேஷ அமைப்புகள் தேவை.

இந்த சூழ்நிலையில் மனிதர்களின் அடிப்படை தேவைகள் விண்வெளியில் எப்படி சமாளிக்கப்படும்?

ப்ராணவாயுவை உருவாக்க Solid fuel oxygen generators அல்லது electrolysis முறையில் அமைக்கப்பட்டிருக்கும். உயிர்வாழ தேவையான காற்றை பூமியிலிருந்தே எடுத்து செல்லப்படும். விண்கலத்தில் மனிதர்களாலும், இதர சாதனங்களாலும் வெளியாகும் carbon-di-oxide புற விண்விளியில் வெளியேற்றப்படும். அல்லது chemical reaction மூலம் carbon-di-oxide ஐ குறைப்பார்கள்.

அதற்கு அடுத்தது தண்ணீர். இதுவும் பூமியிலிருந்துதான் செல்ல வேண்டும். தனித்தனியாக hydrogen-oxygenஆகவோ அல்லது freeze செய்தோ தண்ணீரை பூமியிலிருந்து எடுத்து செல்வார்கள். விண்வெளியில் மனிதர்கள் குளிக்கலாம் – அந்த தண்ணீர் recycle செய்யப்படும். ஆனால் பொதுவாக sponge-bathஎன்று தண்ணீரை தொட்டு துவட்டிக்கொள்வதை தான் பெரும்பாலும் உபயோகிப்பார்கள்.

உணவும் பூமியிலிருந்து தான் எடுத்து செல்லவேண்டும். ஒவ்வொரு விண்வெளிப்பயணியும் ஐந்து மாதங்களுக்கு முன்பே விண்வெளியில் என்ன சாப்பிடுவது என்று menuவை தெரிவு செய்ய வேண்டும்.

இதெல்லாம் போக விண்கலத்தில் வாசனை/துர்நாற்றம் ஆகியவற்றை நீக்குவதற்கும் கருவிகள் இருக்கும். மனிதர்களின் கழிவுகள் dehydrate – அதாவது தண்ணீரை நீக்கி Plastic bagகளில் அடைக்கப்பட்டு பூமிக்கு அனுப்பப்படும்.

விண்வெளியில் எடையற்ற சூழ்நிலையாதலால் நீண்ட நாட்கள் தங்கினால் உடல் பூமியின் சூழ்நிலைகளுக்கு திரும்பிவரும் போது வலுவற்றதாக ஆகிவிடும். அதனால் விண்வெளியில் ௾ருக்கும் போது உடற்பயிற்சி மிகவும் தேவை.  

விண்வெளியின் புற வெளியில் எத்தகைய சூழ்நிலை இருக்கும்?

பதினைந்தே வினாடிகளில் மனிதர்கள் மயக்கம் அடைந்து பின் இறக்கக்கூடும் – ஏனெனில் பிராணவாயு இல்லை. ரத்தமும் உடலிலுள்ள நீரும் உறைந்து போகும் – காற்றழுத்தம் இல்லாமையால். சூரிய வெளிச்சம் 248F டிகிரி வரை இருக்கும். சூரிய ஒளி படாத இடங்களில் -148F டிகிரி இருக்கும். இதர விண்கலங்களிலிருந்து சிறிய பொருட்கள், செயற்கைக்கோள்களின் உடைந்த பாகங்கள் (space debris), இயற்கையான வால் நட்சத்திரங்களின் சிறு கற்கள் ஆகியவை மிக அதிகமான வேகத்தில் (சுமார் 22000 மைல் வேகத்தில்) பறந்து கொண்டிருக்கும். மேலே அவை பட்டால் என்ன ஆகும் என்று சொல்லத்தேவை இல்லை.

விண்வெளி அறிவியல் என்பது இன்னும் நிறைய வளர வேண்டி இருக்கிறது.

 சமீபத்தில் விண்வெளி பயணத்தில் குறிப்பாக தூரத்தில் உள்ள கிரகங்களுக்கு செல்லும்போது மனிதர்கள் எத்தகைய உளவியல் பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள் என்று ஆராய்ச்சி செய்யப்படுகிறது. இது போன்று எவ்வளவோ ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

 தற்சமயம் ஒரு மகத்தான நிகழ்வு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. விண்வெளியில் Sunita williams சாதனை மேல் சாதனை புரிந்து கொண்டிருக்கிறார். இந்த பதிவு எழுதும் போது பூமிக்கு திரும்பிக்கொண்டிருப்பார். வரும் காலத்தில் Sunita williams-ன் சாதனை மனித இனத்திற்கே ஊக்கமளிப்பதாக இருக்கும். A small step by her is a giant leap for humanity, indeed!
 

Advertisements
2 Comments leave one →
 1. June 23, 2007 10:26 am

  அடுத்த கிரகத்துக்கு போவதற்கு முன்பு,ஒளியை விட அதிகாமகப்போகக்கூடிய வானூர்தி தயாராக வேண்டும்.

 2. June 24, 2007 12:09 am

  As a side-track, regarding the interstellar travel, if we put aside the idea of faster than light travel, there could be other ways…

  Look at this one, some thing interesting:
  http://www.treasurehouseofagathiyar.net/35300/35381

  Talks about teleportation in a yogic/scientific perspective.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: