ஆங்கிலத்தில் இதற்கு Gavel என்று பெயர். பொதுக் கூட்டங்களிலும், நீதிமன்ற, மக்கள் மன்றங்களிலும் கவன ஈர்ப்பிற்காக இதை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இப்படி கூட்டம் ஆரம்பிக்கும்போதும் முடியும்போதும் ஒரு மரபாக இந்த சுத்தியை மேஜையில் தட்டி அறிவிக்கலானார்கள். இதனால் Gavel to Gavel என்று ஒரு கூட்டம் நடக்கும் மொத்த நேரத்தையும் ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள்.
நினைத்துப் பாருங்கள் – இப்போதைக்கு இருக்கிற சூழ்நிலையில் ஒரு நீதிபதி, இப்படி பொய் சொல்கிறானே என்று நினைத்து சுத்தியை பொய் சொல்லும் ஆளை நோக்கி வீசி எறிந்தால் என்ன ஆவது? அல்லது இரண்டு வக்கீல்கள் ரொம்ப சீரியஸாக பேசிக்கொண்டிருக்கும் பொது நீதிபதி பாட்டுக்கு, சுத்தியை மேஜையில் உருட்டி சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அப்படி செய்ய மாட்டார்கள் – ஏனென்றால் எப்படி இந்த சுத்தியை உபயோகிக்க வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது!
இந்த சுத்தி பற்றிய நாமெல்லாம் பெருமைப்படக் கூடிய ஒரு விஷயம் இருக்கிறது.
1954 சமயத்தில் அமெரிக்க பாராளுமன்றத்தில் அணுசக்தியைப் பற்றி ஒரு தீர்மானம் எழுந்தது. அப்போது Richard Nixon துணை ஜனாதிபதியாக அவை தலைமை ஏற்று அமர்ந்திருந்தார். பாராளுமன்ற அவைகளுக்கே உரிய காரசாரமான விவாதங்கள் ஏற்பட கையிலிருந்த கவன ஈர்ப்பு சுத்தியால் மேஜையில் போட்டார் ஒரு நாலு போடு! உடைந்தது சுத்தி!
அது சாதாரண சுத்தி அல்ல – 1789-ம் ஆண்டில் அமெரிக்க பாராளுமன்றம் அமைக்கப்பட்டதிலிருந்து உபயோகத்திலிருந்தயானை தந்தத்தால் ஆன சுத்தி. அது உடைந்து போகவும், முதலில் அதற்க்கு வெள்ளியில் பூண் போட்டு பார்த்தார்கள் – சரிவராமல் போகவே இந்திய தூதரகத்துக்கு, இந்தியாவிலிருந்து தந்தத்தில் செய்த சுத்தி வேண்டுமென்று, அமெரிக்காவின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதன் பிறகு, அப்போது இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த Dr. சர்வபல்லி ராதாகிருஷ்ணன் அமெரிக்க விஜயம் செய்தார். அவர் அமெரிக்க பாராளுமன்றத்திற்கும் சென்று பேசினார். அப்போது அமெரிக்க துணை ஜனாதிபதியிடம் இந்தியாவின் சார்பாக புதிய சுத்தி ஒன்று வழங்கப்பட்டது. இன்றளவும் இதுவே வழக்கத்தில் இருந்து வருகிறது.

ஒரு சுத்திக்கு இவ்வளவு கதையா? சுவராஸ்யமான விஷயம். நண்பர் ஸ்ரீகாந்த்-க்கு திடீர் என பொய் மேல் ஒரு காதல் வந்து இருக்கு போல… (கடந்த போஸ்ட் பொய் பற்றி…இந்த போஸ்டிலும் பொய் பற்றி சொல்லி இருக்கிறார்…)
கவனம்..நிறைய பொய் சொல்லாதீர்கள்…