ஜிம்பாப்வே நாட்டில் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமையில் விழுந்து கொண்டு இருக்கிறது. இரண்டு ரொட்டி துண்டு வாங்க ஐம்பது கோடி ஜிம்பாபே ரூபாய்கள் தேவை! இதற்காக மக்கள் கையில் பெட்டி பெட்டியாக நோட்டுகளுடன் அலைய வேண்டிய நிலை. இதை சமாளிக்க ஜிம்பாப்வே அரசாங்கம் கோடிக்கணக்கில் ஒரு கோடி, இருபது கோடி, ஐம்பது கோடி என்பன போன்ற மதிப்பில் நோட்டுகளை அச்சடித்து வெளியிட்டுள்ளது.
இந்த நிலை இன்னும் மோசமடைய கூடும் என்றே எதிர்பார்க்கப் படுகிறது.
அதிக மதிப்பில் நோட்டுக்களை அச்சடிப்பது புதியதில்லை – அமெரிக்காவே(!) 1 லட்சம் மதிப்புள்ள நோட்டுகள் அச்சடித்திருப்பதாக தெரிகிறது. ஆனால் ஜிம்பாப்வே நாடே திவாலாகும் நிலையில் இப்படி பெரிய மதிப்பில் நோட்டுகளை அச்சடிப்பது ஒரு பெருமைக்குரிய விஷயமில்லை. இந்த சிக்கலான நிலையிலிருந்து எப்படி அந்த நாடு வெளிவருகிறது என்பது அனைத்து நாடுகளுக்கும் ஒரு அனுபவமாக இருக்கும்.


[...] போன்றோர் ஐம்பது கோடி மதிப்புள்ள நாணயம் அச்சிட… இரண்டு அமெரிக்க டாலருக்கு [...]
50 மில்லியன் என்பது 5 கோடி தானே?