அதே தான்! இந்த தலைப்பைப் படித்தவுடன் நினைவுக்கு வருவது இந்த பாடல் தான். ஒன்பது வருடங்கள் ஆகியும் மனது மறக்காத பாடல். புதிதாக வந்த மேற்கத்திய நண்பர் ஒருவருக்கு தமிழ் படங்களை அறிமுகம் செய்ய நினைத்தேன். திரைப்படங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்த போது தற்செயலாக “Sense and sensibility” திரைப்படத்தைப் பற்றி பேச்சு வந்தது. உடன் நினைவுக்கு வந்தது அந்த படத்தின் தமிழாக்கமான “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” திரைப்படம் தான். அதிருஷ்டவசமாக சென்ற வாரம் இந்த படத்தின் DVD கிடைத்தது. ஒரு தடவைக்கு இரண்டு தடவை பார்த்து மகிழ்ந்தோம்.
