பவர் இல்லாத கவர்னர் மாளிகை !
மே 10, 2008 ஆல் Srikanth
பவர் என்றால் அதிகாரம் - அந்த Power இல்லை - இது electricity power :). கொல்கத்தாவிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதால் மக்கள் துயரில் தானும் பங்கு கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து மேற்கு வங்க ஆளுநர் தனது மாளிகையில் பகலிலும் மாலையிலும் ஒரு ஒரு மணிநேரம் சுத்தமாக மின்சாரத்தை நிறுத்த முடிவு செய்து அமுல் செய்து விட்டார். இந்த ஆளுநர் வேறு யாரும் இல்லை - மஹாத்மா காந்தியின் பேரரான கோபால் கிருஷ்ண காந்திதான்!

இதற்கு அங்கு ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி என்ன சொல்கிறது?
சாப்பாடு கிடைக்காமல் மக்கள் தவிக்கிறார்கள் என்பதற்காக யாராவது ஒரு வேளை மட்டும் சாப்பிடுவது என்று முடிவெடுத்தால் நாம் என்ன செய்ய முடியும்?’ என்று எரிச்சலாகக் கேட்டிருக்கிறார் மேற்கு வங்க மின்துறை அமைச்சர் மிருணாள் பானர்ஜி.
“மின்சாரத்தை மிச்சப்படுத்த யாராவது விளக்கை அணைத்தால் நல்லதுதான்; அதை நாம் ஏன் ஆட்சேபிக்க வேண்டும்’ என்று மதுரை நிருபர்களிடம் கூறியிருக்கிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்.
அது சரி…! இப்போதுதானே நமது நாட்டில் ஜனநாயகம் வந்து ஐம்பது - அறுபது வருடம் ஆகிறது… இன்னும் அமெரிக்காவைப்போல் இருநூறு முன்னூறு ஆண்டுகள் கழித்து கொஞ்சம் இவர்களுக்கு பொறுப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம்… ![]()


