ஈ புத்தக புழு
ஏப்ரல் 2, 2008 ஆல் Srikanth
புது இடம் பிடித்து shift பண்ணி phone connection வரும் வரை இங்கே வீட்டில் internet access இல்லாமல் இருந்தது. சரி வெறுமனே computer-ல் solitaire விளையாடியே எத்தனை பொழுது போக்குவது என்று அலுத்துக்கொண்ட போதுதான் computer-ல் save பண்ணி வைத்த e-books நினைவுக்கு வந்தது. PKP-யின் blog-லிருந்து download செய்தது, Planet PDF website-லிருந்து download செய்ததெல்லாம் நிறைய சேர்ந்து பொய் விட்டது.
என்னென்ன இருக்கிறது என்று பார்த்தாலே ஆச்சரியமாக இருந்தது. நான் பாட்டுக்கு போகிற இடத்திலெல்லாம் ஒவ்வொரு ஈ புத்தகத்தையும் download பண்ணி வைத்திருக்கிறேன். H.G. Wells-சின் 1984, Eric Von Daniken’s Chariots of Gods, Lawrence of Arabia-வின் உண்மை கதாநாயகன் T.E. Laurence எழுதிய The Seven Pillars of Wisdom, சுஜாதா, பாலகுமாரன் எழுதிய தமிழ் புத்தகங்கள் என்று இருநூறுக்கும் மேல் சேர்ந்து இருந்தது. அடப்பாவமே, இதெல்லாம் திரும்பி கூட பார்க்காமல், புத்தக கண்காட்சிக்கெல்லாம் அலைந்தோமே என்று நினைத்துக்கொண்டேன்.
முன்பு புத்தகங்கள் இல்லாத போது, செய்திகளை ஞாபகம் வைத்துக்கொள்ள வசதியாக கவிதையாக பாடி வைத்தார்கள். பிறகு புத்தகங்களாக வந்த பின் பக்கம் பக்கமாக எழுதி தள்ளினார்கள். அதிலும் வடிவம் குறுகி நாவல்கள் வந்தபோது அதற்கு தகுந்த படி சிறு சிறு வாக்கியங்களாக எழுதிக்கொண்டே போனார்கள். பிறகு சிறுகதைகள். இப்போது ஈ புத்தகங்கள் (ebooks!). முன்பு போலவே கனமான வாக்கியக் கட்டுகளோடு உள்ள எழுத்துக்களை ஈ புத்தகமாக படிக்கும் போது ரொம்பவே கஷ்டமாகத்தான் இருக்கிறது. கொஞ்ச நேரம் படிப்பதற்குள் அயர்ச்சி ஏற்படுகிறது.
இப்படியே போனால் புத்தகங்கள் எல்லாம் இருக்கும் - புத்தக விசுவாசிகளான எழுத்தாணி பூச்சிகளும், புத்தக புழுக்களும் இருக்க மாட்டார்கள்
Blog எழுதுவது போல் எழுதினால்தான் ஈ புத்தகங்கள் படிக்க வசதியாக இருக்கும் என்று தோன்றுகிறது. கடைசியாக சுபாவின் நாவல் ஒன்றை (காத்திருக்கிறேன்) படித்தேன். இண்டர்நெட்டிர்க்காக எழுதப்பட்ட நாவல் என்று போட்டிருந்ததால் கொஞ்சம் ஆர்வத்துடன் படித்தேன். கதை ஒன்றும் சுபாவின் மற்ற கதைகளிலிருந்து மாறுபட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும், படிப்பதற்கு சுலபமாக இருந்தது.
இதுவரைக்கும் ஒரு ஐந்தாறு ebooks படித்து முடித்துவிட்டேன். கொஞ்ச நாளில் ஈ புத்தக புழுவாகி விடுவேன் என்று நினைக்கிறேன் ![]()



முன்பு புத்தகங்கள் இல்லாத போது, செய்திகளை ஞாபகம் வைத்துக்கொள்ள வசதியாக கவிதையாக பாடி வைத்தார்கள்…
Sariyaana mokkai :))
Puthaga puzhu- poi puthaga silanthi aaga porar ivar…silanthi valai mathiri, puthagam ellam thoose padinthu valai ondru uruvagi vidum….pathu…