சென்றவாரம் திரைப்படம் பார்க்க தியேட்டருக்கு போயிருந்தோம். திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு, Airtel விளம்பரம் ஒன்றுக்காக தேசிய கீதம் இசைக்க ஆரம்பித்தார்கள். அந்த விளம்பரத்திலேயே, ‘தேசிய கீதம் ஒளிபரப்ப போகிறோம், தயவு செய்து எழுந்து நில்லுங்கள்’ என்று ஆங்கிலத்தில் எழுதிக் காட்டினார்கள். அரங்கம் முழுவதும் நிறைந்த மக்கள் எழுந்து நிற்க தேசிய கீதத்தை ரசித்து S.P.B பாட மிகவும் லயிக்கும் படி இருந்தது. மனதை செலுத்தி கேட்கும்போது தேச பக்திக்கும் தெய்வ பக்திக்கும் சிறு இழை தான் வேறுபாடு என்று புரிகிறது.

தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நிற்பது, பரவசம் அடைவது, தேச பக்தி செலுத்துவது – இதைப் பற்றியெல்லாம் rationalist ஆக இருப்பவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்று சரியாக தெரியவில்லை. ஆனால் நான் ஒன்றும் பெரிய பகுத்தறிவாளன் இல்லை என்றாலும், தேசிய கீதத்தை விளம்பரமாக உபயோகிப்பதை பார்க்கும்போது தேசிய உணர்ச்சியை வியாபாரத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. அதுவும் பல இடங்களில் இது திரை இடப்ப்படும்போது அதற்குரிய மரியாதை கிடைக்குமா என்பதே நினைக்க தோன்றுகிறது.
கொஞ்சம் யோசித்தால் 1947-ல் தொடங்கி பல திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் தேசிய கொடி, தேசிய கீதம் ஆகியவற்றை ஒலிபரப்பியே வந்திருக்கிறார்கள். இதனால் மக்களுக்கு ஒரு தேசிய உணர்வு உந்தப் படுகிறது – ஊட்டப்படுகிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான். அதோடு நாம் அமெரிக்கர்களைப்போல் அங்கியாக தேசிய கொடியை தைத்து போட்டுக்கொல்லும் அளவுக்கு இல்லா விட்டாலும், பொதுவாக தேசிய கீதம் அதற்குரிய மரியாதையோடு ஒருவரை பாட வைத்து அதை பரவலாக ஒளிபரப்பி நமக்கு தேசியத்தை ஞாபகப்படுத்துகிறார்களே என்று அவர்களை பாராட்டுவதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
Yeah me too got such feeling…Also repeatedly telecasting our national anthem reduces values among general public… but still they are reminding about our anthem. Ellathukkum oru correct balance irukkanum !
I saw this in a movie hall few months back, but there was no advertisement in that.
Taali kodium Desiya kodium Tamil cinemavin inriyamayada amsangal. Whether it is Cinema or Advertisemnt if it really awakens the National spirit then it shall be accepted.
For a change, when all Tamil soaps are concentrating on Marumagal, manaivi etc., 9.30PM Selvi is concentrating on patriotism as well. We could smell the intentions especially after formation of Sarat Kumar’s political party, but on screen it makes a good mood.