நாளை மகர சங்க்ராந்தி திருநாள். மகரம் என்பது தைமாதத்தைக் குறிக்கும். சங்க்ராந்தி என்பது பெயர்ச்சி, நகருதல் என்று பொருள். சூரியனைச் சுற்றுவதில் ஒரு பாதி சுழற்சியை முடித்து பூமி அடுத்த பாதியை ஆரம்பிக்கும்போது, இதுவரை தென்கிழக்கில் உதிக்கும் சூரியன் மெதுவாக நகர்ந்து வடகிழக்கில் அடுத்த ஆறுமாதங்களில் உதிக்க ஆரம்பிக்கும்.
இதையே உத்தராயணம் (உத்தர என்றால் வடக்கு, அயனம் என்பது ஆறு மாதங்கள்) என்று குறிப்பிடுவர். மகர சங்க்ராந்தி அன்று, பாரத நாடெங்கும் பழைய பொருள்களை கழித்து, புதிய வாழ்க்கையை தொடங்குவதற்கு ஏற்ற நாளாக கொண்டாடு- கிறோம். அன்று
குடும்பமாக சேர்ந்து உண்டு, மகிழ்ந்து, மற்ற உயிரினங்- களுக்கும் கொடுத்து, பகிர்ந்து கொண்டாடும் நாள்.
இந்த நாளில் மஞ்சள் உடை தரித்து, உலகத்துக்கு தாயான சரஸ்வதி தேவியை வழிபடும் வழக்கம் பாரதத்தில் பல இடங்களிலும் உண்டு. இதோடு மட்டுமல்லாது இந்த உத்தராயண காலத்தில் மறைந்த பெற்றோர் - உறவினர்களை வழிபடும் வழக்கமும் உண்டு. ராஜஸ்தான் போன்ற சில இடங்களில் இந்த தினத்தில் ஏராளமாக பட்டம் விட்டு மகிழ்கிறார்கள்.

இந்த நாளை பாரதத்தின் வடக்கில் பஞ்சாபில் லோஹ்ரி என்றும், கிழக்கில் வங்காளத்தில் போஹலி பிஹு என்றும், மேற்கே குஜராத், ராஜஸ்தான் போன்ற இடங்களில் சங்க்ராந்தி என்றேயும், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா போன்ற திராவிட பிரதேசங்களில் பொங்கலாகவும், மகர ஜோதி திருநாளாகவும் கொண்டாடுகிறோம்.
கண்ணுக்கு தெரியாத இழையாக, நம் கலாசாரத்தின் அங்கமாக, பாரத தேசத்தை ஒன்றிணைக்கும் இந்த திருநாளில் எல்லோருக்கும் புதிய மேலும் வளமான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்!
சங்க்ராந்தியைப் பற்றி மேலும் சில பதிவுகள்:



அருமையான பதிவு ஸ்ரீகாந்த். பொங்கல் வாழ்த்துக்கள்.
தமிழ்நாட்டில் பெரும்பாலர் இந்த பண்டிகையின் பெயர் “சங்கராந்தி” என்று கொண்டு சங்கர (சிவனது பெயர்) என்பதுடன் தொடர்புள்ளதாக எண்ணி பேசும்போது சிரிப்பு தான் வருகிறது.
தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல, அந்தச் சொல் சங்க்ராந்தி (Sankranti). இதில் அடங்கிய ”க்ராந்தி’ என்ற சொல் தான் புரட்சியைக் குறிக்க பல இந்திய மொழிகளில் பயன்படுத்தப் படுகிறது.. புரட்சி, பெயர்ச்சி, மலர்ச்சி எல்லாம் தொடர்புடையது தானே? :))
இந்த குழப்பத்தை தீர்க்க, சங்கிராந்தி என்று எழுதும் வழக்கத்தைக் கொண்டுவர வேண்டும்.
சங்கராந்தி நல்வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு.