குஜராத்தில் நடந்த தேர்தல் – முன் எப்போதும் இல்லாத அளவு – இந்த முறை இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டை விட பரபரப்பாக இருந்தது. இதில் மேலும் ஆச்சரியப்பட வைக்கும் செய்தி, கிரிக்கெட்டைப்போலவே பல கோடிஸ்வரர்கள் யார் ஜெயிப்பார்கள் என்று பெட்டிங்கில் இறங்கியது தான்! பெட்டிங்கில் புழங்கிய தொகை மட்டும் 2000 கோடி ரூபாயாம்! அதில் பெட்டிங் நடத்திய புக்கிகளுக்கு 675 கோடி லாபம் என்று இந்த தினமலர் செய்தி தெரிவிக்கிறது.
காங்கிரஸ் வெற்றி பெற்றால், 100 ரூபாய்க்கு 102 ரூபாய் என்றும், பா.ஜ., வெற்றி பெற்றால் 110 ரூபாய் தருவோம் என்றும், “புக்கிகள்’ பணம் வாங்கினர். பிரசாரம் சூடுபிடித்த சமயத்தில், பலரும் பா.ஜ., வெற்றி பெறும் என்று பணம் கட்டினர். பா.ஜ., 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால், தனி சலுகை பணம் வைத்தும் சூதாட்டம் நடந்தது.
எனினும், ஓட்டு எண்ணும் இரண்டு நாளுக்கு முன், திடீர் திருப்பம் ஏற்பட்டது. பல கோடீஸ்வரர்கள், காங்கிரஸ் வெற்றி பெறும் என்று லட்சங்களில் சூதாட்டம் ஆட முன்வந்தனர். இதில், ஒரே நாளில் பல கோடிகளுக்கு சூதாட்டம் ஆடப்பட்டது.
சூதாட்டத்தில் மொத்த பணம் இரண்டாயிரம் கோடியை தொட்டது. ஓட்டு எண்ணிக்கை அன்று, காலை முதல் கட்ட எண்ணிக்கையில், காங்கிரஸ் வெற்றி பெறும் என்று பரபரப்பான நிலை ஏற்பட்டபோதும் சிலர் லட்சங்களில் சூதாட்டத்தில் பணம் கட்டினர்.
மொத்தம் இரண்டாயிரம் கோடி சூதாட் டம் நடந்ததில், “புக்கிகளுக்கு’ 675 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இதில், காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கடைசியாக 400 கோடி ரூபாய் வரை குவித்தவர்கள் பணம் தான் “அம்போ’வாகி விட்டது.
இந்த வழக்கம் இனி வரும் தேர்தல்களிலும் பெருகும் என்றே நினைக்கிறேன். இதில் வேதனையான விஷயம், இந்த மாதிரி பெட்டிங் இன்னும் என்னென்ன விஷயங்களுக்கு எல்லாம் வருமோ!