Crows in queue for america
டிசம்பர் 20, 2007 ஆல் Srikanth
நம்மூரில் காக்கைகள் வடை திருடி தின்று விட்டு நல்ல சிலையாகப் பார்த்து சூ..சூ.. போவதோடு சரி. உபயோகமாக ஒரு வேலையும் செய்வதில்லை. முன்பெல்லாம் காக்காய் என்றால் கூடித்தின்னும் என்று சொல்வார்கள். சென்னைக்காக்கைகள் தனியாகவே திருடி துன்னுகின்றன.
இப்படி ஊருக்கு உபயோகம் இல்லாமல் தறுதலையாக திரியும் காக்கைகளுக்கு அமெரிக்காவில் ஒரு வேலை கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். (காக்காய்க்குமா?!) அங்கே மக்களிடம் ஒரு வித்தியாசமான பழக்கம். பொது இடங்களிலும், செயற்கை நீரூற்று அமைந்துள்ள இடங்களிலும் ஒரு பைசா, பத்து பைசா காசுகளை விட்டெறிந்து சில்லரையை சிதறடிப்பார்கள்.
இப்படி ஆண்டு தோறும் தெருவில் வீணாக தூர எறியப்படும் பணம் மட்டும் இருபத்தியோரு கோடி டாலர்களாம் (ஹம்மா…!). பார்த்தார் ஒரு இளைஞர். ஐடியா வந்தது. நாமோ பணத்தை விட்டெறிகிறோம். காக்கைகளோ சரியான பொறுக்கிகளாக இருக்கின்றன.. இந்த விரயமாகும் பணத்தை தடுக்க காக்கைகளை பயன்படுத்தினால் என்ன என்று தோன்றியது.
இதோ இந்த வீடியோவை பாருங்கள்.
இதற்கென ஒரு மெஷின் உருவாக்கியிருக்கிறார். காக்காய் எங்காவது காசு கிடந்து அதை பொறுக்கி வந்து இதில் போட்டால் அதற்கு தின்ன எதாவது வெளியே வரும். இப்படியே எல்லா காக்கைகளையும் பழக்கி விட்டால் விட்டதை பிடித்து விடலாம் என்று பலமான ஐடியா…!
இது மட்டும் க்ளிக்காகி விட்டால், ஆகி விடும் - நாம் 1..2..3 சொல்வதற்குள் க்ளிக் ஆகிவிடும், அப்புறம் நம்மூர் காக்கைகளும் தம் பொன் குஞ்சுகளோடு அமெரிக்காவில் ‘கலெக்டர்’ உத்தியோகத்திற்கு ‘காக்கா’ விசா வாங்க கான்சுலேட் முன்னாடி க்யூவில் நிற்கலாம்… யார் கண்டது? காக்கை போனால் என்ன… குயில் போனால் என்ன… அன்னிய செலாவணி வந்தால் நம் சர்க்காருக்கு போதாதா!



