
மனிதன் கடலையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டான். மக்கள் தொகை பெருக்கத்தால் அடுத்த கட்டத்தை நெருங்கி விட்டோம். நெதர்லாந்து நாட்டில் மக்கள் இருக்க போதுமான இட வசதி இல்லாமையால் கடலை துர்த்து நகரம் அமைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள் (யாருக்கு காண்ட்ராக்ட் கிடைக்க போகிறதோ!). அழகிய கலை நயத்துடன் மலர் வடிவில் செயற்கை தீவு அமைக்க கோரிக்கை எழுந்து இருக்கிறது அந்த நாட்டில்.
இதில் ஒரு விஷயம் கவனிக்க வேண்டியது. நேதர்லண்டின் தலைநகரமான ஆம்ஸ்டர்டாமில் ஒரு சதுர மைலுக்கு 11,548 பேர்கள் வசிக்கிறார்கள். அதற்கே அவர்கள் இடமே இல்லை என்று கூச்சலிட்டு கொண்டு இருக்கிறார்கள். சென்னையிலோ ஒரு சதுர மைலுக்கு 63,242 பேர்கள் வசிக்கிறார்கள். (என்ன கொடுமை சாமி இது?)
நல்லதோ கேட்டதோ தமிழ் நாட்டில் ஒரு துணை நகரம் அமைக்க ஒரு பேச்சாவது எழுந்தது. அதுவும் அமுங்கி போய்விட்டது. மக்கள் தொகையை சமாளிக்க நமது அரசாங்கம் விழிப்புணர்வு(!) பிரசார விளம்பரங்களை தவிர வேறு என்ன செய்யபோகிறது ?



Inimel ithu full tamizh blog-aa ?? I can read tamizh but I find the font size a little too small for comfort :-(((
Is it? If possible pz tell me your browser and operating system. I use windows xp alone - i am not aware how it looks in other machines - will give it a try. thanks for letting me know.
//Inimel ithu full tamizh blog-aa ??
Definitely not. Soon planning do a few posts in sanskrit :)))