A Dilbert’s dialog
டிசம்பர் 9, 2007 ஆல் Srikanth
(ஆபிஸில் இரு நண்பர்கள்)
டேய், ஒரு ஆயிரம் ரூபா பணம் எடு… செலவிருக்கு…
எதுக்கு உனக்கு ஆயிரம் ரூபா? இப்போதான் appraisal முடிஞ்சி கையோட பெரிய மூட்டை இழுக்க முடியாம இழுத்துட்டு வந்த…
அத ஏம்பா கேக்கிற… உனக்கு Jordan தெரியுமா… அந்த நாட்டை சுத்தி இருக்கிற குட்டி குட்டி நாடெல்லாம் எண்ணை வளத்துல மிதந்துட்டு இருக்கிறப்ப Jordan-ல மட்டும் தோண்டினா தண்ணி கூட வராது தெரியுமா? அது மாதிரிதான் நானு…
எலெ.. ஏம்லே கதை விடுதே… நேர உள்ள போய் ஒரு காலால chair-அ இழுத்து போட்டு, இன்னொரு காலை டேபிள் மேல போட்டு அதிகாரமா ரேட் பேசியிருப்ப… Hike எவ்வளவுனு கைமேல துண்டு போட்டு பேசினியாமாம்?
ஹி ஹி… கொஞ்சம் சண்டை போட்டேன்.. ஆனா ஒண்ணும் கடைக்கல… இப்போ marriage வேற ஆயிடுச்சா.. செலவை control பண்ண முடியல…
ஹேய் marriage அப்பொ என்ன பண்ணினனு எனக்கு தெரியாதா… வீடு ஒண்ணை பிடிச்சி வாங்கி போட்ட.. அவுங்க வீட்லேர்ந்து வீடு full-ஆ ரொப்பிட்டு போயிட்டாங்க… சாமர்த்திய காரனப்பா நீ…
சரி சரி… நேரமாவுது எடு ஆயிரம் ரூபாயை…
எங்கேர்ந்து எடுக்கறது… நான் ஒரு dilbert company employee… நான் ஆயிரம் ரூபாய்க்கு எங்க போவேன்.. இல்லை அப்படியே எங்கிட்ட இருந்தாலும் நீயும் ஒரு dilbert company employee… நீதான் எப்படி திருப்பி கொடுப்பனு நான் கொடுப்பேன்???
(பணம் கேட்டவர் அம்பேல்)




This is a true kadai..