கமலின் சூரசம்ஹாரம் (Witness 1985)
செப்டம்பர் 15, 2007 ஆல் Srikanth
நேற்று மாலை weekendல் எதாவது படம் பார்க்கலாம் என்று video libraryல் உலவியபோது இந்த படம் கிடைத்தது.
1985ல் வந்த இந்த Witness படம் பார்த்த போது முதலில் தோன்றியது - “அடப் பாவி! இது கமலின் சூரசம்ஹாரம் படம் மாதிரி இல்லை?” ! கமல் எங்கேயாவது இதைப்பற்றி சொல்லியிருக்கிறாரா என்று பார்க்க வேண்டும். Witness திரைப்படத்தில் Harrison Ford, Danny Glover நடித்திருக்கிறார்கள்.
கதை மிகவும் இயல்பாக அழுத்தமான இசையுடன் எடுத்திருக்கிறார்கள். 1960s - 1970s வருடங்களில்
எடுக்கப்பட்ட திரைப்படங்களின் பாதிப்பு இந்த படத்தில் தெரிகிறது. Amish எனப்படும் Anababtist christian மக்களின் பழக்கவழக்கங்களை பின்னணியாகக்கொண்டு அவர்களின் அமைதியான வன்முறையற்ற வாழ்வில் வன்முறை நுழைவதை அருமையாக சித்தரித்திருக்கிறார்கள். (இதெல்லாம் சூரசம்ஹாரத்தில் இல்லை).
கணவனை இழந்த amish பெண்ணும் அவளது சிறுவயது மகனும் ரயில் வழியாக Baltimore க்கு பயணிக்கிறார்கள். வழியில் அந்த சிறுவன் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்கும்போது டாய்லட்டில் ஒரு கொலையை பார்த்து விடுகிறான். (ah.. சூரசம்ஹாரம்). அதன்பின் போலிஸ் அதிகாரியான Harrison Ford அந்த பையனை குற்றவாளியை அடையாளம் காட்ட அழைத்து செல்கிறார்.
கடைசியில் அந்த கொலையை செய்த கும்பல் போலீஸ் அதிகாரிகளில் சிலர் என்று தெரியவருகிறது. இந்த சூழ்ச்சியில் ஹீரோவின் நண்பனான இன்னொரு போலிஸ் அதிகாரியும் கொலை செய்யப்படுகிறான். Harrison Ford அந்த சாட்சியான சிறுவனை காப்பாற்ற அவர்கள் கிராமத்து வீட்டிற்கே கொண்டு போய் விடுகிறார். ஆனால் அதற்கு முன் நடந்த ஒரு துப்பாக்கி சண்டையில் ஏற்பட்ட குண்டு காயத்தினால் மேற்கொண்டு பயணிக்க முடியாமல் அந்த வீட்டிலேயே தங்கிவிடுகிறார்.
அந்த சிறுவனின் தாயான அந்த விதவைப்பெண்ணிற்கும் ஹீரோவிற்கும் மெலிதான காதல் மலருகின்றது. அந்த கிராமத்தை சேர்ந்த Amish சமூகத்தில் ஹீரோவின் வரவால் சலசலப்பு எழுகிறது. இதனால் வில்லன்களுக்கு இவர்கள் இருக்கும் இடம் தெரிந்து போய் அவர்கள் தேடிவர கடைசியில் சுபமாக முடிகிறது. (இப்போதெல்லாம் படத்தில் “சுபம்” - “வணக்கம்” போல ஸ்லைடுகள் போடுவதை நிறுத்திவிட்டார்கள் இல்லையா !).
கமல் நிச்சயம் இந்த படத்தை ரசித்திருப்பார். ஆனால் சூரசம்ஹாரத்தில் தமிழ் ரசிகர்களுக்காக நிறைய compromise செய்துவிட்டதாகவே படுகிறது.



