Feed on
இடுகைகள்
மறுமொழிகள்

செப்டம்பர், 2007 க்கான தொகுப்பு

சில விசித்திரமான மனிதர்கள் இருக்கிறார்கள் - விடாக்கண்டர்கள். ஒரு பொருளை தருவதாக சொல்லிவிட்டாலோ, ஒரு காரியம் நடக்க வேண்டும் என்றாலோ, அலைச்சலோ, கஷ்டமோ பார்க்காமல் அலைந்து திரிந்து சாதித்து விடுவார்கள். ஏழு கடல், ஏழு மலை தாண்டி, இருட்டு குகைக்குள் இருநூறு காதம் நடந்து ஒரு கிளிக்கூண்டை எடுத்து வரவேண்டும் என்றாலும் அத்தனையும் செய்து விட ரெடியாக இருப்பார்கள்.
இப்படிப்பட்ட சிலரை “ஏஜெண்டு”களாக அரசாங்க அலுவலகங்களில் பார்க்கலாம் - எல்லா “formalities”-ம் செய்துவிடுவதாக சொல்லி அத்தனை டாக்குமெண்டுகள், [...]

முழு பதிவையும் வாசிக்க »

ஏன் எப்போதும்
தோற்றுப்போகிறேன்
முயற்சிக்கும்
போதெல்லாம்?
ஏன் எப்போதும்
வெற்றி பெறுகிறேன்
விலகும்
போதெல்லாம்?
ஏன் எப்போதும்
விலகி செல்கிறேன்
வாய்ப்புகள்
வரும்போதெல்லாம்?
ஏன் எப்போதும்
தேடுகிறேன்
காணாமல்போன
பொருளையெல்லாம்?
ஏன் எப்போதும்
மவுனிக்கிறேன்
குரலெழுப்ப
நினைக்கும்போதெல்லாம்?
ஏன் எப்போதும்
பயப்படுகிறேன்
என்பலம்
மிகுந்த போதெல்லாம்?
ஏன் எப்போதும்
கவலைப்படுகிறேன்
எதிர்காலம்
தெரியாத போதெல்லாம்?
ஏன் எப்போதும்
விரும்புகிறேன்
என்னிடம்
இல்லாதவற்றை யெல்லாம்?
ஏன் எப்போதும்
யாரும் கிடைப்பதில்லை
பங்கு போட்டுக்
கொள்ள நினைக்கும்போதெல்லாம்?
ஏன் எப்போதும்
எல்லோரும் இருக்கிறார்கள்
தனிமை
தேடும்போதெல்லாம்?
ஏன் எப்போதும்
காலம் நகர்ந்து போகிறது
நான் நிலைக்க
நினைக்கும்போதெல்லாம்?
ஏன் எப்போதும்
சாகிறேன்
வாழ
ஆசைப்படும் போதெல்லாம்?
- ஸ்ரீகாந்த்
[ இது 3d கவிதை.. கொஞ்சம் உற்றுப்பார்த்தால் தான் கவிதை தெரியும் ]

முழு பதிவையும் வாசிக்க »

சமீபத்தில் வரும் படங்களில் வேத மந்திரங்கள் ஒரு voodoo effect-உடன் உபயோகப்படுத்தப்படுகின்றன. cinema, western, megaserials என்று பல இடங்களில் கண்ட மேனிக்கு உபயோகப்படுத்துகிறார்கள்.
ஒரு தொலைக்காட்சி தொடரில் கூட கோபமாக கொலை வெறியுடன் கிளம்பி கதாநாயகி செல்லும் போது பின்னணியில் வேதமந்திரம் ஒலிக்கவிட்டார்கள். அவ்வளவு ஏன், கீதையின் ஸ்லோகம் ஒன்றை சொல்லிக்கொண்டே தானே ‘அன்னியன்’ எதிரிகளை கொல்லுகிறான்… பாபா படத்தில் magic போல மந்திர ஒலிகளை பயன்படுத்தினார்கள். நல்லவேளை அந்த படம் வெற்றி [...]

முழு பதிவையும் வாசிக்க »

பழைய இடுகைகள் »