புலவர் கீரன் சொற்பொழிவுகள்
ஆகஸ்ட் 22, 2007 ஆல் Srikanth

தமிழகத்தில் தர்மத்தையும், பக்தியையும் கதைகள் புராணங்களை சொல்லி வளர்த்த மகான்கள் நிறைய இருந்தார்கள் - இருக்கிறார்கள். அதில் சென்ற நூற்றாண்டில் குறிப்பிட்டு சொல்லக் கூடியவர்கள் புலவர் கீரனும், கிருபானந்த வாரியார் சுவாமிகள் போன்றோர்.
இவர்களது சொற்போழிவை பாமரரிலிருந்து படித்தவர்வரை அனைவரும் விரும்பி கேட்பார்கள். கிருபானந்த வாரியார் சொற்பொழிவின் நடுவே அங்கே வந்திருக்கும் சிறுவர்-சிறுமிகளிடம் புராணங்களிலிருந்து கேள்வி கேட்பாராம். சரியாக பதில் சொல்லும் குழந்தைக்கு எளிமையான பரிசும் கொடுப்பாராம். ‘தெய்வத்தின் குரல்’ என்ற மகா காவியம் எழுதிய ரா.கணபதி அவர்கள் கூட சைவ சம்பந்தமான சந்தேகங்களை கிருபானந்த வாரியாரிடம் கேட்டு பதில் பெற்றதுண்டு.
புலவர் கீரன் அவர்கள் மாயவரத்தை சேர்ந்தவர். அவரது சீடர்தான் தற்போது சொற்பொழிவுகள் ஆற்றிக்கொண்டிருக்கும் நாகை முகுந்தன் அவர்கள்.
வலையில் இப்பெருந்தகைகளின் சொற்பொழிவுகளின் வீடியோ/ஆடியோ மற்ற விவரங்கள் மிகவும் அரிதாக இருக்கிறது. கீரன் சொற்பொழிவுகளை (6 Parts) கேட்க:
Pulavar Keeran Thiruvempavai 01
Pulavar Keeran Thiruvempavai 02
Pulavar Keeran Thiruvempavai 03
Pulavar Keeran Thiruvempavai 04




Sir i want Pulavar keeran’s Villi Baradham. Can somebody tell me where i can get it?
anbu naNbarE,
Pulavar keeran avarkaLin Villi bhaaratham soRpozhivu eppozhuthu kidaikkum ayya?
endrum anbudan
sivaG