
அணு சக்தி ஒப்பந்தம் “123″ பற்றி எத்தனை பேர் பேசினாலும் இறுதியில் குழப்பம் தான் மிஞ்சுகிறது. ஏனென்றால் கருத்து சொல்பவர்களில் பெரும்பாலோர் அரசியல் வாதிகள். பொதுமக்கள் ஒத்துக்கொள்ளக் கூடிய அப்துல் கலாம் போன்ற அறிஞர்களின் கருத்துக்கள் தெரியவந்தாலே குழப்பம் தீரும்.
அணுசக்தி ஒப்பந்தம் கூடாது என்பதற்கு முதன்மையாக சொல்லப்படும் காரணங்கள்:
- இனி அணுஆயுத சோதனை என்பது மிகக்கடினம். அதன் விளைவுகள் மிக சிக்கலாகிவிடும்.
- இந்தியாவின் வெளியுரவு மற்றும் உள்நாட்டு கொள்கைகளில் அமெரிக்கா அதிகம் தலையிடும். இந்தியா அமெரிக்காவிற்கு ஒரு pet state ஆகிவிடும்
- நமது உள்நாட்டு அறிவியல் ஆராய்ச்சிகள், அரசியல், பாதுகாப்பு விஷயங்களில் அமெரிக்காவின் சொற்படி நடக்க வேண்டியிருக்கும்
- இது தவிர தொழில் நுட்ப காரணங்கள், reprocessing atomic fuel போன்றவை
அணு சக்தி ஒப்பந்தம் தேவை என்பதற்கான காரணங்கள்:
- இதனால் இந்தியா தனது energy related தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும்
- முப்பது ஆண்டுகளாக அணுசக்தி சம்பந்தமான தொழில்நுட்ப-வியாபாரங்களில் தனிமைப்படுத்தப்பட்ட இந்தியா இதன்மூலம் மற்ற உலகநாடுகளுடன் இணைய முடியும்
- அமெரிக்காவை தொடர்ந்து ரஷ்யா போன்ற மற்ற நாடுகள் இந்தியாவுடன் ஒப்பந்தத்துக்கு வரும். இதனால் நமக்கு மேலும் நன்மைகள்
- தொழில்நுட்ப ரீதியிலான காரணங்கள் பேச்சு வார்த்தைகள் மூலம் சரிசெய்யப்பட்டு விட்டன.
இவற்றைப் பார்க்கும் போது, தீமைகள் என்பது இருந்தாலும் நன்மைகள் நிறைய இருப்பதாகவே படுகிறது. இதில் விடையளிக்கப்படாத கேள்விகள் சில:
- இந்த ஒப்பந்தத்தினால் அமெரிக்காவிற்கு என்ன நன்மை? அவர்கள் ஏன் நம்மேல் கரிசனம் காட்ட வேண்டும்? என்ன அக்கறை?
- இந்த 123 ஒப்பந்தம் அமெரிக்கா மற்ற பல நாடுகளுடன் கூட செய்து கொண்டுள்ளது. நமது ஒப்பந்தத்தில் மற்ற ஒப்பந்தங்களில் இல்லாதது அல்லது இதில் இல்லாமல் மற்ற ஒப்பந்தங்களில் இருப்பவை என்ன?
- ஒரு வேளை நாளை அண்டை நாடுகள் ஏதாவது ஒன்றுடன் நமக்கு போர் என்று வேண்டாம் - சச்சரவு ஏற்பட்டால் அப்போது அமெரிக்காவின் தலையீடு கண்டிப்பாக இருக்கும் - அதை எவ்வாறு சமாளிப்போம்?
இறுதியாக, மத்திய அரசின் நிலைப்பாட்டை நோக்கும்போது இந்த அணுஆயுத ஒப்பந்தம் கண்டிப்பாக வருவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாகவே படுகிறது. அமெரிக்காவை ஒருவித பயத்துடன் எதிர்நோக்குவதை விட நாமும் எந்த சூழ்நிலைக்கும் நம்மை தயார் படுத்திக்கொண்டு இந்த ஒப்பந்தத்தை positiveஆக அணுகுவதே நல்லது.


