Fighting with Fitness
ஜூலை 10, 2007 ஆல் Srikanth

‘No pain no gain’ என்றார் கமல் ஒரு பேட்டியில். உடல் வலியை பொறுத்துக்கொள்கிற மன உறுதி வருகிறவரை physical fitness அடைவது மிகக்கடினம். சிலர் ஆயிரக்கணக்கில் ஜிம்மில் பணம் கட்டுவதோடு சரி - இரண்டு நாள் போனதும் ஒரு ஜலதோஷம் வரும் - அத்துடன் நிறுத்திவிடுவார்கள். (சிலர் என்ன சிலர்… நம்ம சொந்தக் கதையே அப்படித்தான்!).
Exercise is a bunk. If you are healthy you, you don’t need it. If you are sick, you shouldn’t take it - என்று யாரோ சொன்னது போல் உடற்பயிற்சி வாழ்க்கையில் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளாமல் ஏதோ புதிதாக வித்தியாசமாக செய்வதாக நினைத்துக் கொண்டு செய்யும்போது தொடரமுடியாமலும் அதனால் பலனற்று போகிறது.
இப்போதெல்லாம் அனேகமாக எல்லா வீடுகளிலும் ஒரு diabetic, ஒரு sugar, ஒரு obesity போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இதற்கு காரணம் என்னவென்று ஆராய முற்படுவது waste - no use. அதனால் தொடர்ந்து உடற்பயிற்சியை தினசரி வேலைகளில் ஒரு பகுதியாக எடுத்துக்கொண்டு செய்வது தான் வழி.
குறைந்த பட்சம், அலுவலகத்தில் இடைவேளையின் போது ஒரு சின்ன walk, பிறகு மாலையில் ஒரு brisk walk என்றாவது செய்ய வேண்டும். எந்தவித உடற்பயிற்சிக்கும் உடல் தகுதியற்று போவதற்குமுன் இப்போதே மன உறுதியுடன் உடற்பயிற்சி செய்வது மிக அவசியம்.



அருமையான பேசும் படம்