Film Munich(2005)
ஜூலை 5, 2007 ஆல் Srikanth
ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கின் Munich படத்தை அண்மையில் பார்த்தேன். 1972ல் நடந்த ம்யூனிச் படுகொலை சம்பவத்தை கருவாக வைத்து எடுக்கப்பட்டது. இஸ்ரேலை சேர்ந்த பதினோரு ஒலிம்பிக் வீரர்கள் தீவிரவாதிகளால் கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கு பதிலடியாக சாதாரண Mossad அதிகாரி ஒருவரை (ஹீரோ) அனுப்புவார்கள். அந்த அதிகாரி வேறு சிலருடன் கூட்டு சேர்ந்து தீவிரவாதிகளை கொன்று பழிவாங்குவார்கள்.
இந்த படம் வழக்கமான ஸ்பீல்பர்க் படங்களில் இருந்து நிறைய வித்தியாசப்பட்டிருக்கிறது. ஒரு வரலாற்று சம்பவத்தை கற்பனையுடன் கலந்து சொல்லுவது மிகக்கடினமான காரியம். அதிலும் இத்தகைய ஒரு தீம் எடுத்துக்கொண்டு சொல்ல நிறைய துணிச்சலும் தேவை.
இந்த படம் ஒரு இஸ்ரேலிய பார்வையில் எடுக்கப்பட்டுள்ளது என்ற விமரிசனம் பெரிதாக எழுப்பப்பட்டது. ஹாலிவுட் முழுக்க யூத இன ஆதிக்கம் அதிகம் - அவர்கள் தரும் முதலீட்டில் தான் பல படங்கள் உருவாகின்றன. ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கூட இதற்கு இடம் கொடுத்து தனது படத்தை எடுத்துள்ளார் என்று விமரிசகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இருந்தாலும் ம்யூனிச் படம் ஸ்பீல்பர்க்குக்கே ஒரு சாதனை மைல்கல். அதுவும் அந்த கடைசி காட்சியில் World Trade Center பின்னணியில் “NINE out of ELEVEN terrorists involved in the Munich killings were killed” (reminding 9/11) என்ற வாசகங்கள் ஒரு directorial touch!




ஹீரோ கொல்வது உண்மையான தீவிரவாதிகள் அல்ல என்பதைக் காட்டாமல் காட்டி இருப்பாரே (reading between the lines)