பெயர் மாறிய ஊர்கள்
ஜூன் 12, 2007 ஆல் Srikanth

தமிழகத்தை பொறுத்தவரை பல ஊர்களுக்கும் வெவ்வேறு பெயர்கள் இருந்திருப்பதாக தெரிகிறது. ஆயிரம் வருடங்களிலிருந்து சுமார் நூறு வருடங்கள் முன்பு வரை இருந்த பெயர்கள் தற்போது மாறி வேறு பெயரில் வழங்குவதாக தெரிகிறது.
பொதுவாக இது போன்ற மாற்றங்கள் ஆட்சியாளர்களாலேயே ஏற்பட்டிருக்கக்கூடும். உதாரணமாக தமிழகத்தை தெலுங்கர்கள், துருக்கர்கள், ஆங்கிலேயர்கள் என்று பலரும் ஆண்டிருக்கிறார்கள். சில வருடங்கள் முன்புவரை, ஆங்கிலேயர்கள் வழங்கிவந்த பெயர்களே பொதுவாக உபயோகப்படுத்தப்பட்டது நினைவிருக்கலாம் - உதாரணமாக Tanjore, Tuticorin, Tinneveli போன்றவை.
இது மட்டுமின்றி பழங்காலத்தில் வழக்கத்திலிருந்து இப்போது மாறியிருப்பவை என்று சில ஊர்களின் பெயர்கள் மிகவும் ஆச்சரிய படவைக்கும். உதாரணமாக சில புதிய - பழைய பெயர்கள் விளக்குடி - விளக்கொளி, ஓரிக்கை - ஒரிரவிருக்கை, திண்ணனூர் - திருநின்ற ஊர் - இது போல சம்ஸ்கிருத - தமிழ் பெயர்கள் வேதச்ரேணி - வேளச்சேரி, தேவநாயகம்பேட்டை - தேனாம் பேட்டை. இவற்றில் பலவும் கல்வெட்டுகளிலும், அந்த அந்த ஊர் முக்கியமான தலபுராணங்களிலும் காணக்கிடைக்கும்.
இவற்றை ஆதார பூர்வமாக உறுதி செய்ய ஆய்வுகள் தேவை.
இதே மாதிரி ஊர் பெயர்கள் மாறியதை கொஞ்சம் caricature செய்து விளையாட்டாக சொல்வார்கள்: ஆரம்பத்தில் கபிலாரண்யம் என்றிருந்தது காலப்போக்கில் கலிபாரண்யம் என்று மாறி இக்காலத்தில் கலிபோர்னியா என்று மாறிவிட்டது என்று!!



திருமறைக்காடே பின் வேதாரண்யம் எனச் சமஸ்கிருதப்பட்டதாகப் படித்தேன்.