
இது என் முதல் பதிவு. (Of course, சில பரிசோதனைகளுக்கு பிறகு). இந்த பதிவின் பெயருக்கு என்ன காரணம் என்று இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
மனோரஞ்சிதம் என்பதற்கு மனதுக்கு பிடித்தது, விரும்பப்படுவது என்று கொள்ளலாம். அல்லது எந்த எண்ணத்துடன் அணுகுகிறோமோ அதையே பிரதிபலிக்கும் என்றும் கொள்ளலாம். மனோரஞ்சிதம் என்று ஒரு மலர் கூட இருக்கிறது.
ஏன் சமஸ்கிருத பெயராக தமிழ் பதிவுக்கு வைத்தேன் என்றால், அதென்னவோ மேலே சொன்ன பொருளை தமிழில் ஒரே வார்த்தையாக எதுவும் நினைவுக்கு வரவில்லை. நீங்கள் யாராவ்து தான் தெரிந்தால் சொல்லுங்களேன்.
நான் இன்னொரு பதிவும் விட்டு விட்டு எழுதிக்கொண்டிருக்கிறேன்.
இனி வரும் நாட்களில் இந்த பதிவில் என் மனோரஞ்சிதமானவைகளை
பகிர்ந்து கொள்கிறேன்.
